அடிக்கடி சாப்பிட்ட பின் புளிப்பு ஏப்பம் வருகிறதா? இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றிப் பாருங்க
உணவுக்குப் பிறகு ஏப்பம் வருவது ஒரு பொதுவான நிகழ்வுதான். ஆனால் இந்த ஏப்பங்கள் புளிப்பாக மாறும்போது அசௌகரியத்தை ஏற்படுத்தும். வாயில் சுவையை கெடுக்கும், மேலும் மார்பு மற்றும் தொண்டையில் எரியும் உணர்வுக்கு வழிவகுக்கும். புளிப்பு ஏப்பங்கள் (Sour burbs) பெரும்பாலும் அதிக எண்ணெய் உணவுகளை சாப்பிடுவது, அதிகமாக சாப்பிடுவது அல்லது மிக விரைவாக சாப்பிடுவது போன்றவற்றால் ஏற்படுகிறது. புளிப்பு ஏப்பம் மற்றும் அமிலத்தன்மையை திறம்பட போக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களை இதில் பார்க்கலாம். பெருஞ்சீரகம் அதன் செரிமான நன்மைகளுக்கு பெயர் பெற்றது. உணவுக்குப் பிறகு அரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை உட்கொள்வது சீரான செரிமானத்திற்கு உதவுகிறது. இது வாயு, அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் புளிப்பு ஏப்பம் போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும்.
புளிப்பு ஏக்கத்தை போக்க உதவும் புதினா டீ
புதினா இலைகள் நெஞ்செரிச்சலைத் தணித்து அமிலத்தன்மையைக் குறைக்கும் குளிர்ச்சித் தன்மை கொண்டது. புதினா தேநீர் குடிப்பது புளிப்பு ஏப்பங்கள் மற்றும் வாயுவுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். சீரக விதை செரிமானத்திற்கு நன்மை பயக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சீரகப் பொடியைக் கலந்து தயாரிக்கப்படும் சீரகத் தண்ணீரைக் குடிப்பது வாயு, அமிலத்தன்மை மற்றும் புளிப்பு ஏப்பத்தைப் போக்க உதவும். இஞ்சியில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்துகின்றன. இஞ்சியை உட்கொள்வது அல்லது இஞ்சி சாறு குடிப்பது வாயு, அமிலத்தன்மை மற்றும் புளிப்பு ஏப்பங்களை போக்கும்.
பெருங்காய நீர் புளிப்பு ஏப்பத்தைப் போக்க உதவும்
பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ள பெருங்காயத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகினால், வயிற்று உபாதைகளுக்கு விரைவான தீர்வு கிடைக்கும். ஒரு சிட்டிகை பெருங்காய பொடியை ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிப்பது, வயிற்று வலி, வாயு, அமிலத்தன்மை மற்றும் புளிப்பு ஏப்பம் ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. இங்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் அனைத்தும், இயற்கை முறையில் விரைவான நிவாரணம் மற்றும் ஆரோக்கியமான செரிமான செயல்முறைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதர உடல் நல பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர்களின் முறையான ஆலோசனையுடன் இவற்றை பயன்படுத்த வேண்டும்.