
ஆரோக்கியத்திற்கு உதவும், உண்ணக்கூடிய மலர் வகைகள் ஐந்து
செய்தி முன்னோட்டம்
மலர்கள், நீண்ட காலமாக அவற்றின் அழகு மற்றும் வாசனைக்காக மதிக்கப்படுகின்றன. அழகாக இருப்பதை தாண்டி, இந்த சிறிய பூக்கள், உங்கள் உணவில் புதிய சுவைகள் மற்றும் ஊட்டச்சத்துகளை அதிகரிக்கும்.
ஆம், இயற்கை எழில் கொஞ்சும் சில பூக்கள், நம் உணவில் சேர்த்துக்கொள்ள கூடியவை என ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன.
அப்படி நம் இந்தியாவில் கிடைக்கும் சில உண்ணக்கூடிய பூக்களின் பட்டியல் இதோ:
card 2
செம்பருத்தி மற்றும் தாமரை
ஆழமான சிவந்த நிறமுடைய செம்பருத்தி மலர்கள், பொதுவாக தேநீர் தயாரிக்கப் பயன்படுகின்றன. உலர்ந்த பூக்களின் பாகங்கள், குறிப்பாக காளிக்ஸ் (பூவின் உறை) பாரம்பரிய செம்பருத்தி தேநீர் தயாரிக்கப் பயன்படுகிறது.
அந்தோசயினின்கள் மற்றும் பாலிசாக்கரைடுகள் இருப்பதால், செம்பருத்தியானது, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை திறம்பட மேம்படுத்தும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
மேலும் இது ஆக்ஸிஜனேற்றத்தின் ஆதாரமாக அமைகிறது.
தாமரை: ஆசிய நாடுகளில் பன்னெடுங்காலமாக இந்த தாமரை மலர்கள் உணவாக பயன்படுத்தப்பட்டுள்ளன. தேநீர், மூலிகை மருந்துகள் என இதன் பயன்பாடு ஏராளம். தாமரை தண்டு, இதழ், மற்றும் விதை என தாமரை மலரின் அனைத்து பாகங்களும் தற்போது உணவாக மாறியுள்ளது. தாமரை இதழ்களில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளன.
card 3
ரோஜா
நறுமணம் மற்றும் இனிப்பு சுவைக்காக அறியப்பட்ட ரோஜாவை பல்வேறு வகைகளில் உண்ணலாம். பல்வேறு பானங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் கலந்து சுவைக்கலாம்.
ஆனால் அனைத்து ரோஜாக்களும் உண்ணக்கூடியவை அல்ல. உண்ணக்கூடிய ரோஜா இதழ்கள், ஒரு இனிமையான வாசனை மற்றும் சுவையை வழங்குகின்றன.
அவை உங்களுக்கு வலி நிவாரணத்தையும் வழங்கக்கூடியது.
அதோடு, ரோஜா இதழ்களை வடிகட்டுவதன் மூலம் பெறப்பட்ட ரோஸ் வாட்டர், அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
குல்கந்து எனப்படும் பிரபலமான பொருள், காய்ந்த ரோஜா இதழ்களுடன் தேன் கலந்து தயாரிக்கப்படுகிறது.
card 4
வேப்பம் பூ
வேப்பம் பூ ரசம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கோடையில் மட்டுமே பூக்ககூடிய வேப்பம் பூக்களை, நமது முன்னோர்கள் சேகரித்து, பதப்படுத்தி, அதை வருடம் முழுவதும் உபயோகித்தனர். அத்தனை மருத்துவ குணம் நிறைந்தது இந்த வேப்பம் பூ.
இயற்கையான கிருமி நாசினியாக அறியப்படும் இந்த வேப்பம் பூ, குடல் பிரச்சனைகள், வயிற்று பிரச்சனைகள், பித்தம் போன்ற பலவற்றிற்கும் மருந்தாக பயன்படும்.
சரும வியாதிக்கு மருந்தாக இதை எடுத்துக்கொள்ளலாம்.
card 5
பரங்கி பூ
பூசணிக்காய் வகையை சேர்ந்த பரங்கிக்காய் பூக்கள், நாம் உணவில் பயன்படுத்தக்கூடிய குணாதிசயம் உடைய மலராகும்.
இந்த பூக்கள் பெரும்பாலும் இத்தாலிய மற்றும் மெக்ஸிகன் உணவு வகைகளான பாஸ்தா மற்றும் சூப்களில் அதிக பயன்படுத்தப்படும்.
ஆனால் நம் நாட்டில் இதை மற்ற காய்கறிகளுடன் சேர்க்கப்பட்டு சமைக்கப்படுகிறது.
இந்த பூவில வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.