சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 6 'நோ-குக்' உணவுகள்; ஆரோக்கியமும் சுவையும் கேரண்டி
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு போர் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்பால் தற்போது நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு, பல இல்லத்தரசிகளை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், சமையல் எரிவாயு இல்லாமலேயே சத்தான மற்றும் வயிறை நிரப்பக்கூடிய பல 'No-cook' உணவுகளை நம்மால் எளிதில் தயாரிக்க முடியும். இதை செய்வது நேரத்தை மிச்சம் பிடிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமானதும் கூட. இதை வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டே எளிதில் தயாரிக்கலாம்.
ரெசிபிகள் #1
அடுப்பில்லா சமையல்: சில எளிய ரெசிபிகள் #1
1. காய்கறி சாண்ட்விச்: பிரெட் ஸ்லைஸ்களுக்கு நடுவில் தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் மற்றும் லெட்டூஸ் இலைகளை அடுக்கி, சிறிதளவு வெண்ணெய் அல்லது புதினா சட்னி தடவினால் சுவையான சாண்ட்விச் தயார். இது காலை உணவிற்கும், மாலை நேர சிற்றுண்டிக்கும் ஏற்றது. 2. முளைகட்டிய பயறு சாலட்: புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பாசிப்பயறுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, எலுமிச்சை சாறு மற்றும் சாட் மசாலா சேர்த்தால் சத்தான மதிய உணவு தயார். இதற்குச் சூடுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை. 3. தயிர் சாதம்: ஏற்கனவே சமைத்து மீதமான சாதம் இருந்தால், அதனுடன் தயிர், உப்பு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பிசைந்தால் குளிர்ச்சியான தயிர் சாதம் தயார். இது கோடை காலத்திற்கும் ஏற்றது.
ரெசிபிகள் #2
அடுப்பில்லா சமையல்: சில எளிய ரெசிபிகள் #2
4. பழக் கலவை: வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி போன்ற பழங்களை நறுக்கி அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் அல்லது தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது உடனடி ஆற்றலை வழங்கும். 5. சுண்டல் சாட்: ஊறவைத்த அல்லது வேகவைத்த சுண்டலுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துப் பிசைந்தால் சுவையான சாட் தயார். பன்னீர் துண்டுகளை சேர்ப்பதன் மூலம் கூடுதல் புரதத்தைப் பெறலாம். 6. ஓவர்நைட் ஓட்ஸ்: ஓட்ஸை பால் அல்லது தயிரில் இரவு முழுவதும் ஊறவைத்தால், காலையில் அது மென்மையாக மாறிவிடும். அதனுடன் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து சாப்பிடலாம்.
டிப்ஸ்
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க சில டிப்ஸ்
ஊறவைத்தல்: தானியங்களை வேகவைப்பதற்கு பதில் அதிக நேரம் ஊறவைப்பது அவற்றின் சமைக்கும் நேரத்தைக் குறைக்கும். இண்டக்ஷன் அடுப்பு: அவசர தேவைகளுக்காக மின்சார இண்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தலாம். பழங்கள் மற்றும் பிரட்: சமைக்கத் தேவையில்லாத பழங்கள், தயிர் மற்றும் பிரட் போன்றவற்றை எப்போதும் கையிருப்பில் வைத்திருக்கவும்.