NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கோடை வெயிலை சமாளிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் ட்ரிங்க்ஸ் 
    கோடை வெயிலை சமாளிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் ட்ரிங்க்ஸ் 
    வாழ்க்கை

    கோடை வெயிலை சமாளிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் ட்ரிங்க்ஸ் 

    எழுதியவர் Venkatalakshmi V
    April 14, 2023 | 10:32 am 1 நிமிட வாசிப்பு
    கோடை வெயிலை சமாளிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் ட்ரிங்க்ஸ் 
    உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரோக்கியமான பானகம், வீட்டிலேயே தயார் செய்யலாம்

    சித்திரை பிறந்து விட்டது. அப்படியென்றால், கொளுத்தும் வெயில் காலம் துவங்கி விட்டது என்று அர்த்தம். இந்த வெயில் காலத்தில், உங்கள் ஆரோக்கியத்தை காப்பது அவசியம். கோடை காலத்தில், நோய் தொற்றுகளும் அதிகம். அதை சமாளிக்க, வெயில் காலத்தில் சத்தான உணவை சாப்பிடுவதன் மூலமும், உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலமும், பொது சுகாதாரத்தையும் கடைபிடிக்க வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருக்க, தண்ணீர், சூப்ஸ் மற்றும் ஃபுரூட் ஜூஸ் போன்றவற்றை அவ்வப்போது பருகவேண்டும். அப்படி வீட்டிலேயே நீங்கள் தயாரிக்க கூடிய ஈஸியான ஜூஸ் ரெசிபிக்கள் இதோ: நீர்மோர்: உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி போன்றவை சேர்த்து தயாரிக்கப்படும் நீர்மோரானது, அதிக வியர்வையினால் வெளியேறும் உப்பு சத்தை ஈடுசெய்ய உதவுகிறது. கறிவேப்பிலை உடலுக்கு குளிர்ச்சி தரும்.

    வீட்டிலேயே செய்யக்கூடிய ஈஸி ஜூஸ் வகைகள் 

    பானகம்: பனைவெல்லம், சுக்கு, ஏலக்காய், புதினா இலை அல்லது வெப்ப இலை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சூப்பர் ஜூஸ், இரும்பு சத்து நிறைந்தது. அதோடு, வெப்ப இலை சிறந்த கிருமி நாசினியாகும். லெமன்-புதினா ட்ரின்க்: எலுமிச்சை ஜூஸ்சில், ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து, சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை சேர்த்து தயாரிக்கலாம். அதோடு, சிறிது புதினா தழையையும் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். கூல் ஆனதும் சூப்பரான லெமன்-மின்ட் கூலர் தயார். தர்பூசணி ஜூஸ்: தர்பூசணி பழம் கோடை காலத்தின் வரப்பிரசாதம். அதை பழமாகவும் சாப்பிடலாம், அல்லது ஐஸ் சேர்த்து ஜூஸ்சாக அரைக்கலாம். வெள்ளரி ஜூஸ்: உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை பெற, வெள்ளரிக்காய் ஜூஸ் குடிக்கலாம். இது வயிற்று புண்ணையும் சரி செய்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம்

    ஆரோக்கியம்

    கொளுத்தும் வெயில்; கொட்டும் வியர்வை; சமாளிக்க குட்டி டிப்ஸ்   சுற்றுலா
    இன்று சர்வதேச பார்கின்சன் தினம் 2023: இந்த மூளைக் கோளாறுக்கான அறிகுறிகள் என்னென்ன? உடல் ஆரோக்கியம்
    மூலிகை கரும்புச்சாறு கேள்விப்பட்டதுண்டா? திண்டுக்கல்லில் பிரபலமான இந்த ஜூஸ் பற்றி சில தகவல்கள் உணவு குறிப்புகள்
    அதிகரித்து வரும் கொரோனா: உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள் கொரோனா

    உடல் ஆரோக்கியம்

    சர்வதேச ஹோமியோபதி தினம்: அதன் வரலாறையும், முக்கியத்துவத்தையும் பற்றி தெரிந்து கொள்க ஆரோக்கியம்
    அரைஞாண் கயிறு கட்டுவது எதற்காக என உங்களுக்கு தெரியுமா? குழந்தை பராமரிப்பு
    டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் பசியை கட்டுப்படுத்த சில ஈசி டிப்ஸ் உணவு குறிப்புகள்
    உலக சுகாதார தினம் 2023: முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவத்தை அறிவீர்களா? ஆரோக்கியம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023