பிளாக் காபி குடித்தால் கல்லீரல் குணமாகுமா? ஃபேட்டி லிவரை விரட்டும் உணவுகள்
செய்தி முன்னோட்டம்
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் காரணமாக ஃபேட்டி லிவர் எனப்படும் கல்லீரல் கொழுப்பு நோய் பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் ஏற்படும் இந்த பாதிப்பு, ஆரம்பத்தில் அறிகுறிகள் காட்டாவிட்டாலும், பின்நாட்களில் கல்லீரல் சிதைவு வரை கொண்டு செல்லலாம். இதனைச் சரிசெய்ய உணவுக் பழக்கவழக்கங்களே மிகச்சிறந்த மருந்தாகும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உணவுகள்
நன்மை பயக்கும் உணவுகள்
நிபுணர்களின் பரிந்துரையில் பிளாக் காபி முதலிடம் பிடித்துள்ளது. பொதுவாக காபி உடலுக்குத் தீங்கு என நினைக்கிறோம். ஆனால், பிளாக் காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கல்லீரலைப் பாதுகாப்பதில் முதலிடம் வகிக்கின்றன. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் பண்புகள் கல்லீரல் கொழுப்பு சேர்வதைத் தடுக்கின்றன. கொழுப்பு நிறைந்த சால்மன் மற்றும் சார்டின் போன்ற மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. நார்ச்சத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்த பச்சை இலை காய்கறிகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் கல்லீரலுக்கும் வலிமை சேர்க்கின்றன. பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் உள்ள அதிகப்படியான புரதம் மற்றும் நார்ச்சத்து கல்லீரலுக்கு ஏற்றது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பெர்ரி பழங்கள் ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் மாற்றாக அமைகின்றன.
ஆபத்தான உணவுகள்
தவிர்க்க வேண்டிய ஆபத்தான உணவுகள்
கல்லீரலைக் கெடுக்கும் சில உணவுகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெள்ளை அரிசி, வெள்ளை பிரட் போன்ற உணவுகள் கல்லீரலில் கொழுப்பு படியக் காரணமாகின்றன. குளிர்பானங்கள் மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் ஃபேட்டி லிவர் பாதிப்பை நேரடியாக அதிகரிக்கின்றன. இவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.