தங்கள் ஊரில் குடியேற, அரசாங்கமே பணம் தரும் விசித்திர நாடுகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
ஒரு நாட்டில் வசிப்பதற்கு, குடிமக்களான நாம் தான் வரி கட்ட வேண்டி இருக்கும். அது போக, அந்த நாட்டின் விலைவாசிக்கு தகுந்தாற்போல மற்ற செலவுகளும் கூடும். ஆனால், உலகின் ஒரு சில நாடுகளில் தங்குவதற்கு, அந்த நாட்டின் அரசாங்கமே பணம் தரும் விசித்திரங்களும் இங்கே உள்ளது. "நீங்க வந்தா மட்டும் போதும்" என அந்த நாட்டிற்கு உங்களை வரவேற்கவே இந்த ஏற்பாடு. அப்படிபட்ட நாடுகள் எங்கே இருக்கிறது என தெரிந்துகொள்ள, தொடர்ந்து படிக்கவும். ப்ரெசிஸ், இத்தாலி: இந்த கிராமத்தில் பெரும்பான்மையானவர்கள் வயதானவர்கள். அதனை ஜனத்தொகையும் குறைந்து வருகிறது. அதை பெருக்கவே இந்த ஐடியா. நீங்கள் இந்த ஊரில் குடியேறினால், அரசாங்கம் உங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்குகிறதாம்.
ஜனத்தொகையை பெருக்க அரசாங்கம் இத்தகைய முயற்சிகளில் இறங்கியுள்ளது
ஆன்டிகிதெரா, கிரீஸ்: அழகிய கிரீஸ் நகருக்கு போக யாருக்குதான் விருப்பம் இருக்காது. இந்த அழகான ஆன்டிகிதெரா கிராமத்தில் குடியேறினால், மூன்று ஆண்டுகளுக்கு, மாதந்தோறும் உங்களுக்கு அரசாங்கம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கும். அல்பினென், சுவிட்சர்லாந்து: இந்த மலைகிராமத்தில் குடியேற, நீங்கள் 40 வயதிற்குள் இருந்தால் ரூ.20 லட்சமும், தம்பதிகளாக இருந்தால், 40 லட்சமும், குழந்தைகளோடு குடியேறினால், ஒவ்வொரு குழந்தைக்கும் 8 லட்சம் வீதம், அந்நாட்டின் அரசாங்கம் வழங்குகிறது. அலாஸ்கா: பனிபிரதேசமான இந்த நகரில் வாழ்பவர்கள் மிக குறைவு. அதனால், இங்கு குடியேறுபவர்களுக்கு ஆண்டுதோறும் 1.5 லட்சம் வழங்குகிறது அந்த அரசு. பொங்கா, ஸ்பெயின்: இந்த கிராமத்திற்கு நீங்கள் குடியேறும், உங்களுக்கு 1.5 லட்சம் வழங்கும் அந்த அரசு.