தோலுக்கு இயற்கையான பளபளப்பு வேண்டுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய சில சீரம் வகைகள்
அழகு குறிப்பு: சீரம்கள் என்பது சருமத்தில் ஆழமாக ஊடுருவி, கரும்புள்ளிகள், சீரற்ற நிறம் மற்றும் நீரிழப்பு போன்ற பல்வேறு கவலைகளை நிவர்த்தி செய்யும் ஆற்றல் வாய்ந்த கலவைகளைக் கொண்டுள்ளன. அப்படிப்பட்ட சீரம்களை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம். வைட்டமின்-சி சீரம் எலுமிச்சை சாற்றை சம அளவு காய்ச்சி வடிகட்டிய நீர் அல்லது ரோஸ் வாட்டருடன் கலக்கவும். கூடுதல் ஊட்டச்சத்திற்கு, அந்த கலவையில் சில துளிகள் வைட்டமின்-ஈ எண்ணெயைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கருப்பு கண்ணாடி பாட்டிலில் இதை சேமிக்கவும். இதை தூங்குவதற்கு முன்பு கழுவிய முகத்தில் தடவவும். மஞ்சள் சீரம் மஞ்சள் தூளில் தேங்காய் எண்ணெய் கலந்து, அதை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து வெந்நீர் கொண்டு கழுவவும்.
தக்காளி சாறு மற்றும் பச்சை பால் சீரம்
தக்காளி சாற்றையும் சம பங்கு பச்சை பாலையும் சேர்த்து நன்கு கலக்கவும். அந்த கலவையை வடிகட்டி முகத்தில் தேய்கவும். மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் தோலில் இந்த சீரத்தை தடவவும். இதை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். உருளைக்கிழங்கு சாறு மற்றும் ஆலீவ் எண்ணெய் சீரம் உருளைக்கிழங்கு சாற்றையும் சம பங்கு ஆலீவ் எண்ணெய்யையும் சேர்த்து நன்கு கலக்கவும். அந்த கலவையை வடிகட்டி முகத்தில் தேய்க்கவும். ஒரு கருப்பு கண்ணாடி பாட்டிலில் இதை சேமிக்கவும். தினமும் இரண்டு முறை இதை உங்கள் தோலில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மறையும்.