Loading...
தீபாவளி ஷாப்பிங் நெரிசலில் தப்ப பாதுகாப்பு & ஆன்லைன் விழிப்புணர்வு வழிகாட்டி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகள், ஜவுளிக்கடைகள், பண்டிகைக் கோலம் பூண்டுள்ளன

தீபாவளி ஷாப்பிங் நெரிசலில் தப்ப பாதுகாப்பு & ஆன்லைன் விழிப்புணர்வு வழிகாட்டி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 03, 2026
02:40 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடெங்கிலும் உள்ள கடைவீதிகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் பண்டிகைக் கோலம் பூண்டுள்ளன. குறிப்பாக சென்னையின் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற பிரதான வணிக மையங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர். ஷாப்பிங் அனுபவம் மகிழ்ச்சியாக அமைவதோடு, கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் பிக்பாக்கெட் திருட்டுகள், பண மோசடிகள் மற்றும் கவனச்சிதறல் சம்பவங்களை தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அத்தியாவசிய வழிகாட்டுதல்கள் இதோ:

# 1

பணம், நகை & செல்போன் பாதுகாப்பு

அதிக விலையுள்ள தங்க நகைகளை அணிந்து கடைவீதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஹாண்ட் பேக்குகளை உடலுக்கு முன்புறமாக வைத்திருக்க வேண்டும். பணம், ஏடிஎம் கார்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை ஒரே இடத்தில் வைக்காமல் பிரித்து வைக்கலாம்.

ஆண்கள் செல்போன் மற்றும் பணப்பையை பின்பக்கப் பாக்கெட்டில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையின்றி மோதுபவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

# 2

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை & ஆன்லைன் விழிப்புணர்வு

யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தும்போது கடையின் பெயர் மற்றும் பெறுநர் விவரங்களைச் சரிபார்த்த பின்னரே பணத்தை அனுப்ப வேண்டும்.

ரகசிய எண்ணை (PIN) பிறர் பார்க்காதவாறு பதிவு செய்ய வேண்டும். *

வாட்ஸ்அப், சமூக வலைதளங்களில் வரும் போலி பரிசு கூப்பன்கள் மற்றும் 80% தள்ளுபடி லிங்குகளை கிளிக் செய்யக் கூடாது.

நம்பகமான செயலிகள் மூலம் மட்டுமே ஆன்லைன் கொள்முதல் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

# 3 

குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு & நேர மேலாண்மை

கூட்ட நெரிசலை தவிர்க்க மாலை நேரங்கள் மற்றும் வார இறுதி நாட்களுக்கு பதிலாக காலை அல்லது மதிய நேரங்களில் ஷாப்பிங் செல்வது சிறந்தது.

கூட்டத்தில் குழந்தைகள் தவறினால் தொடர்புகொள்ள பெற்றோரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் அடங்கிய அட்டையை குழந்தைகளின் பாக்கெட்டில் வைக்கலாம்.

குடும்பத்தினர் கூட்டத்தில் பிரிந்தால் மீண்டும் ஒன்று சேர கடைவீதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

திரடித் தள்ளுபடி ஆடைகளின் தரம் மற்றும் அசல் விலையை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவதுடன், கட்டாயம் விற்பனை ரசீது பெற வேண்டும்.

ADVERTISEMENT