ஏன் PPF திட்டத்தில் முதலீடு செய்யக்கூடாது? 5 காரணங்கள்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை விட குறைவான வட்டிவிகிதம்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு கடந்த நிதியாண்டில் 8.15% வட்டி வழங்கப்பட்டது. ஆனால், பொது வருங்கால வைப்பு நிதியில் 7.1% மட்டுமே தற்போது வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. மாத சம்பளதாரர்கள் தங்களுடைய தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் தன்னார்வ வைப்புநிதி முறையில் கூடுதலாக பணத்தை ஒதுக்கலாம். நிலையான அதிகபட்ச வைப்புத் தொகை: ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சத்தை மட்டுமே பொது வருங்கால வைப்பு நிதியின் கீழ் செலுத்த முடியும். இதனை கடந்த பல ஆண்டுகளாகவே அரசு உயர்த்தவில்லை. மாத சம்பளதாரர்கள் தன்னார்வ வைப்பு நிதி முறையின் கீழ் ரூ.2.5 லட்சம் வரை தங்கள் வைப்புநிதி கணக்கில் செலுத்த முடியும்.
நீண்ட லாக்-இன் பீரியட்:
PPF கணக்கு முதிர்வடைய 15 ஆண்டுகள் ஆகும். நீண்டகால முதலீடு செய்யவேண்டும் என நினைப்பவர்கள் மட்டுமே PPF-ல் முதலீடு செய்ய வேண்டும். கடுமையான விதிமுறைகள்: PPF திட்டத்தில் முதிர்வடைவதற்கு முன்பே பணத்தை எடுக்க கடுமையான வதிமுறைகள் இருக்கின்றன. திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டைத் தவிர்த்து, ஐந்து நிதியாண்டுகளுக்கு பிறகே ஒரே ஒரு முறை மட்டுமே பணத்தை திரும்பப் பெற முடியும். திட்டத்தைக் முன்கூட்டியே முடிக்கும் வசதி இல்லை: PPF திட்டத்தில் முதலீடு செய்வதை நிறுத்த வேண்டும் என்று முன்கூட்டியே திட்டத்தை முடிக்க முடியாது. நாம் முதலீடு செய்யத் தொடங்கிய நிதியாண்டில் இருந்து ஐந்து நிதியாண்டுகளுக்குப் பின்பே, அதுவும் மிக முக்கியமான காரணங்கள் என்றால் மட்டுமே திட்டத்தை முடிக்க முடியும்.