சர்வதேச மகளிர் தினத்தன்று நீங்கள் அணிய வேண்டிய நிறங்களும், அவற்றின் அர்த்தங்களும்
உலகம் முழுவதும் நடைபெற்ற பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் ஏராளம். குறிப்பாக 'டைம்ஸ் அப்' இயக்கம், மீ டூ இயக்கங்கள், பெண்களுக்கான சம ஊதியம் மற்றும் சுகாதார உரிமைகளுக்கான தொடர்ச்சியான போராட்டங்களால், இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினம், முன்னெப்போதையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக்கருதப்படுகிறது. இந்த சர்வேதேச தினத்தன்று, குறிப்பிட்ட நிறங்களை அணியும் வழக்கம் எப்போது துவங்கியது என்று தெரியவில்லை. இருப்பினும், குறிப்பாக, 2018 கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில், கருப்பு உடை அணிந்து டைம்ஸ் அப்க்கு ஆதரவாக நின்றது ஹாலிவுட். அதேபோல, இந்த ஆண்டும், நீங்கள் தேர்ந்தெடுக்க போகும் ஆடையின் நிறத்தை கொண்டு, நீங்கள் பல பொருளை உலகிற்கு உணர்த்தலாம்.
நிறங்களும், அர்த்தங்களும்!
சிவப்பு: சிவப்பு நிறம், காண்போர்களின் கவனத்தை ஈர்க்கும் தன்மை உடையது. இது வலிமை மற்றும் சக்தியை குறிக்கும். ஊதா: ஊதா என்பது விசுவாசத்தின் நிறம். தான் கொண்ட நோக்கத்தில் நிலையாகவும், எந்த காரணத்திற்காகவும், மாறாத உறுதிப்பாட்டை குறிக்கும் நிறம். மேலும் இது கண்ணியம் மற்றும் சுயமரியாதையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. வெள்ளை: தூய்மை மாற்றும் நல்லொழுக்கத்தின் அடையாளமாக வெள்ளை நிறம் கருதப்படுகிறது. பச்சை: பெண்களுக்கான போராட்ட குழுவின் நிறமாக பச்சை தேர்ந்தெடுக்க பட்டுள்ளது. அது, நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. பிங்க்: பொதுவாகவே, உலகெங்கும் நிலவும், சமூக நெறிமுறைகளின்படி, இளஞ்சிவப்பு அல்லது பச்சை என்பது பெண்பாலை குறிக்கும். மேலும் அது, கருணை மற்றும் அன்பைக் குறிக்கிறது.