வாலெண்டைன் வீக்: இன்று சாக்லேட் தினம்; சாக்லேட்டின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ரோஸ் டேவில் தொடங்கி, இறுதியாக பிப்ரவரி 14 காதலர் தினத்தில் முடியும், இந்த காதலர் தின வாரத்தில், மூன்றாவது நாள், அதாவது பிப்ரவரி 9, 'சாக்லேட் டே' எனக்கொண்டாடப்படுகிறது. பிரியமானவர்களுடன் அன்பை பரிமாறிக்கொள்ளவும், அந்த உறவின் முக்கியத்துவத்தை குறிப்பால் உணர்த்தவும், இனிப்பான சாக்லேட்-ஐ பரிமாறிக்கொள்ளவும், இந்த நாளை தேர்ந்தெடுக்கிறார்கள் காதலர்கள். இந்த நாளின் வரலாறும், முக்கியத்துவத்தை பற்றி ஏற்கனவே தெரிந்த நிலையில், பொதுவில் சாக்லேட் உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பாப்போம் டார்க் சாக்லேட் உங்களுக்கு பயனளிக்கும் என்று ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் இதோ:
சாக்லேட்டின் நன்மைகள்
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது: டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும், இரத்த உறைவு அபாயத்தைக் குறைப்பதாகவும், இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதாகவும், இதனால் பக்கவாதம், இதய நோய் மற்றும் இதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயங்களைக் குறைக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை சமநிலைப்படுத்துகிறது : ஃபிளாவோனால்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுகிறது: எபிடெச்சின் செல்களைப் பாதுகாக்கிறது, அவற்றை வலிமையாக்குகிறது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது: டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளவனால்கள் மூளைக்கு ரத்தஓட்டத்தை அதிகரித்து, அதன் செயல்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மன அழுத்தத்தைக் குறைக்கிறது
உண்ணக்கூடிய சாக்லேட்டின் வகைகள்
மில்க் சாக்லேட்: இது சர்க்கரை மற்றும் பாலுடன் கலந்த, பத்து முதல் 40 சதவீதம் கொக்கோவை மட்டுமே கொண்டுள்ளது. ஒயிட் சாக்லேட்: ஒயிட் சாக்லேட்டில் குறைந்தபட்சம் 20 சதவிகிதம் கோகோ வெண்ணெய், அதிகபட்சம் 55 சதவிகிதம் சர்க்கரை மற்றும் சுமார் 15 சதவிகிதம் பால் திடப்பொருட்கள் உள்ளன. டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் பால் திடப்பொருட்கள் இல்லை. டார்க் சாக்லேட் பார்களில் உள்ள கோகோவின் அளவு 30 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை இருக்கும் செமிஸ்வீட் சாக்லேட்: செமிஸ்வீட் சாக்லேட்டில் குறைந்தது 35 சதவிகிதம் கோகோ திடப்பொருள்கள் உள்ளன பேக்கிங் சாக்லேட்: இது தூய சாக்லேட் மதுபானம் அல்லது வெறுமனே அறைக்கப்பட்ட கோகோ பீன்ஸ் கொண்டு செய்யப்பட்டது.