
காதலர் தினம் 2023 : இன்று சாக்லேட் தினம்; அதன் வரலாறும், முக்கியத்துவம் பற்றி சிறு குறிப்பு
செய்தி முன்னோட்டம்
ரோஸ் டேவில் தொடங்கி, இறுதியாக பிப்ரவரி 14 காதலர் தினத்தில் முடியும், இந்த காதலர் தின வாரத்தில், மூன்றாவது நாள், அதாவது பிப்ரவரி 9, 'சாக்லேட் டே' எனக்கொண்டாடப்படுகிறது.
பிரியமானவர்களுடன் அன்பை பரிமாறிக்கொள்ளவும், அந்த உறவின் முக்கியத்துவத்தை குறிப்பால் உணர்த்தவும், இனிப்பான சாக்லேட்-ஐ பரிமாறிக்கொள்ளவும், இந்த நாளை தேர்ந்தெடுக்கிறார்கள் காதலர்கள்.
இந்த நாளின் வரலாறும், முக்கியத்துவத்தை பற்றியும் சில தகவல்கள்:
செயிண்ட் வாலண்டைனைக் கௌரவிக்கும் வகையில் தான், இந்த நாளையும் தேர்ந்தெடுத்தார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இது ஒரு கிறிஸ்தவ பண்டிகை நாளாகத் தொடங்கியது என்றும், வாலண்டைன் என்ற பெயர் கொண்ட மற்ற நபர்கள் மேல் இருக்கும் அன்பை உணர்த்த, இந்த நாளை தேர்ந்தெடுத்து உள்ளனர் எனவும் நம்பப்படுகிறது.
காதலர் வாரம்
காதலை உணர்த்த சாக்லேட் பரிமாற தொடங்கியது எப்போது?
அப்படி விக்டோரியன் காலத்திலிருந்து, பல நாடுகளில் அன்பை பரிமாற, காதல் கொண்டவர்கள், ஒருவருக்கொருவர் வழங்கிய பரிசுகளில் சாக்லேட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஒரு பிரிட்டிஷ் குடும்பம், தாங்கள் கொள்முதல் செய்த கோகோவை செலவு செய்ய ஒரு வழி தேடிக்கொண்டிருந்ததாகவும், அதன் தலைவரான ரிச்சர்ட் காட்பரி என்பவர், அதை சுவையான ட்ரிங்கிங் சாக்லேட்டாக (drinking chocolate) மாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
1861-இல், அதே ட்ரிங்கிங் சாக்லேட்டை, சாப்பிடும் வகையில், ஒரு அழகான இதய வடிவிலான பெட்டிகளில் விற்க தொடங்கியதாகவும், அந்த பெட்டிகளை, காதலர்கள், நினைவு சின்னமாகவும், காதல் கடிதங்களை சேமித்து வைக்க ஒரு அடையாள பெட்டகமாகவும் உபயோகிக்க தொடங்கியதாகும் குறிப்பு உள்ளது.
இது முதல்தான், காதலர்கள், சாக்லேட்டை பரிமாறிக்கொள்ள தொடங்கி இருப்பார்கள் என நம்பப்படுகிறது