காதலர் தினம் 2023: இன்று ப்ரொபோஸ் டே! மனம்கவர்ந்தவரிடம் உங்கள் காதலை கூற சில வழிகள்
செய்தி முன்னோட்டம்
நீங்கள், உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதற்கும், உங்கள் துணையிடம் காதலை சிறப்பான முறையில் ப்ரொபோஸ் செய்வதற்கும் இந்த நாளை தேர்ந்தெடுக்கலாம்.
இந்த ப்ரோபோசல் டே, காதல் உறவில், ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கும் நாள் என்பதால், பலர் தங்கள் துணைக்கு மறக்க முடியாத நிகழ்வாக, ப்ரோபோசல் பிளான்களை தேர்வு செய்கின்றனர்.
உங்கள் அன்பின் அடையாளமாக, அந்த ப்ரோபோசல் இருக்க வேண்டும். உங்களுக்கு உதவ, சில வழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
பாரம்பரிய ப்ரோபோசல்: காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு ப்ரோபோசல் ஐடியா, மனம் விரும்பும் ஒருவர் முன்பு, ஒரு காலில் மண்டியிட்டு, உங்கள் காதலை வெளிப்படுத்துவது. கூடவே, ஒரு ரோஜா பூவோ, பூங்கொத்தோ, மோதிரோமோ தந்து, உங்கள் காதலை ஏற்று கொள்ள சொல்லலாம்.
காதலர் தினம்
வேடிக்கை பிரியர்களுக்கான புதையல் வேட்டை ப்ரோபோசல் ஐடியா
ப்ளாஷ் மாப்: உங்கள் நண்பர்கள் அல்லது காதலுக்கு உதவும் உறவினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, சர்ப்ரைஸ்சாக ஒரு பாடலுக்கு நடனமாட சொல்லலாம். நடனத்தில் முடிவில், நீங்களும் இணைந்து உங்கள் காதலை வெளிப்படுத்தலாம். சினிமா பாணியில் இருக்கும் இந்த ப்ரோபோசல் தான் தற்போதைய ட்ரெண்ட்.
டிஜிட்டல் ப்ரோபோசல்: உங்கள் லவ்வர் ஒரு டெக்னாலஜி பிரியரா? அப்படியென்றால், 'ஐ லவ் யூ' என்ற வாசகம் பொறித்த அழகான டிஜிட்டல் கிரீட்டிங் கார்டு-ஐ உருவாக்கலாம்.
புதையல் வேட்டை: வேடிக்கை பிரியர்களுக்கான ப்ரோபோசல் ஐடியா இது. அங்கங்கே மறைத்து வைக்கப்பட்ட குறிப்பு சீட்டுகள் மூலம், ஒரு விளையாட்டை துவங்கி, இறுதியில் உங்கள் காதலை பாரம்பரிய முறைப்படி ப்ரொபோஸ் செய்யலாம். இதற்கு உங்கள் நண்பர்கள் உதவியை நாடலாம்.