ப்ரோபோஸ் டே: அதன் வரலாறும் முக்கியத்துவமும் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஆண்டுதோறும், காதலர் தின வாரத்தில், ஒவ்வொரு நாளிற்கு ஒரு முக்கியத்துவம் உண்டென்று தெரியுமா? 'ரோஸ் டே' வில் துவங்கி, பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தில் முடியும் இந்த காதலர் தின கொண்டாட்டத்தில், பிப்ரவரி 8 -ஆம் தேதியை 'உலக ப்ரோபோஸ் டே' என காதலர்கள் கொண்டாடுகிறார்கள். இந்நாளின் முக்கியத்துவமும், அதன் வரலாற்றை பற்றியும் ஒரு சிறு தொகுப்பு. நீங்கள், உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதற்கும், உங்கள் துணையிடம் காதலை சிறப்பான முறையில் ப்ரொபோஸ் செய்வதற்கும் இந்த நாளை தேர்ந்தெடுக்கலாம். இந்த ப்ரோபோசல் டே, காதல் உறவில், ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கும் நாள் என்பதால், பலர் தங்கள் துணைக்கு மறக்க முடியாத நிகழ்வாக, ப்ரோபோசல் பிளான்களை தேர்வு செய்கின்றனர்.
ப்ரோபோஸ் டேவின் வரலாறு
உங்கள் அன்பின் அடையாளமாக, அந்த ப்ரோபோசல் இருக்க வேண்டும். இந்த ப்ரோபோஸ் டே என்பது, பல நூற்றாண்டுகளை கடைபிடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நாள் வரை வெளிநாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த கலாச்சாரம், சிறிது காலமாய் இந்தியாவிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ப்ரோபோஸ் டே-விற்க்கான குறிப்பான வரலாற்று பதிவு ஏதும் இல்லையெனினும், 1477 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட இதே நாளில் ஆஸ்திரிய ஆர்ச்டியூக் மாக்சிமிலியன் என்பவர், பர்கண்டியின் மேரிக்கு ஒரு வைர மோதிரத்தை பரிசளித்ததாக சான்றுகள் உள்ளது. அதே போல, 1816 இல் இந்நாளில், இளவரசி சார்லோட்டின் வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இவற்றை தொடர்ந்து தான், காதலர் வாரத்தின் இரண்டாவது நாளில் ப்ரோபோஸ் டே ஒரு கொண்டாட்டமாக மாறியுள்ளது.