Page Loader
காதலர் தினம் 2023: இன்று ரோஜா தினம்; வெவ்வேறு வண்ண ரோஜாக்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ளுங்கள்
காதலர் தினத்திற்கு எந்த நிற ரோஜாவை தரலாம் என தெரியுமா?

காதலர் தினம் 2023: இன்று ரோஜா தினம்; வெவ்வேறு வண்ண ரோஜாக்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 07, 2023
01:53 pm

செய்தி முன்னோட்டம்

இன்று ரோஸ் டே. காதலர் தினமும், ரோஜாவும் பிரிக்க முடியாதது. காதலர்கள் தங்கள் பிரியத்தை வெளிப்படுத்த இந்த வண்ண மலரை பயன்படுத்துவது வழக்கம். எனினும் அனைத்து ரோஜா மலர்களும் காதலை வெளிப்படுத்த பயன்படுவதில்லை. ஒவ்வொரு வண்ணத்திற்கும், ஒவ்வொரு பொருள் உண்டு எனத்தெரியுமா? தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்: சிவப்பு: இது அன்பையும் ஆர்வத்தையும் குறிக்கிறது. மனதில் உள்ள பிரியத்தை வெளிக்காட்ட இந்த சிவப்பு நிற ரோஜா மலர்களாலான போக்கேவை தரலாம். ஆரஞ்சு: காதலையும் தாண்டி, ஒருவர் மீது அபரிமிதமான பேரார்வம் இருக்கிறது என்றால், நீங்கள் ஆரஞ்சு நிற ரோஜா மலரை பரிசாக தரலாம். நீங்கள் விரும்பும் ஒருவருக்கு, அவற்றைப் பரிசாகக் தரும்போது, அவர்கள் மீது உங்களது 'passion' எவ்வளவு என்பதை வெளிப்படுத்துகிறீர்கள்.

காதலர் தின வாரம்

நட்பை குறிக்கும் மஞ்சள் நிற ரோஜா

பீச் நிறம்: ஒருவரின் மீது உள்ள காதலை இலைமறை காயாக தெரியப்படுத்த இந்த நிற ரோஜாவை தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் ஒப்புக்கொள்ள வெட்கப்பட்டாலும், நீங்கள் அவர்களைக் காதலிக்கிறீர்கள் என்பதை குறிப்பாக தெரியப்படுத்த ஒரு பீச் ரோஜாவை பரிசளிக்கவும். மஞ்சள்: வாழ்நாள் முழுவதும் தொடரப்போகும் நட்பிற்கு மஞ்சள் நிற ரோஜாவை பரிசளிக்கலாம். லாவெண்டர்: பார்த்ததும் காதல் வயப்பட்டவருக்கு, இந்த நிற ரோஜாவை பரிசளிக்கலாம். இளஞ்சிவப்பு: இந்த நிறம் பாராட்டு மற்றும் போற்றுதலைக் குறிக்கும். நீங்கள் யாரையாவது பாராட்ட விரும்பினால், அவர்களுக்கு இளஞ்சிவப்பு ரோஜாவை பரிசளித்து அவர்களின் மகத்துவத்தை அவர்களுக்கே உணர்த்தலாம். வெள்ளை: எளிமையை குறிக்கும் இந்த வண்ண ரோஜா, பொதுவாக திருமண விழாக்களிலும், இறுதி சடங்குகளிலும் தான் பயன்படுத்தப்படுகிறது.