இப்போது சூயிங்கம் மெல்லுவது ஆரோக்கியமானது என வல்லுநர்கள் கூறுகிறார்கள்
சூயிங்கம் பொதுவாக ஸ்டைலுக்காகவும், பந்தாவுக்காகவும் மெல்லப்பட்டாலும், பல நேரங்களில், வாய் துர்நாற்றத்தை தவிர்க்க பயன்படுகிறது. அடிக்கடி இந்த சூயிங்கம் மெல்ல கூடாது என பரவலாக கூறப்பட்டாலும், அதனால் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என வல்லுநர்கள் கூறுகின்றனர். அவற்றை தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்: சூயிங்கம் மூலம் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தலாம். சூயிங்கம் உங்கள் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, மேலும் முக்கியமான விவரங்களை நினைவில் வைக்க உதவுகிறது. ஒரு ஆராய்ச்சியில், சூயிங்கம் மூலம் குறுகிய கால நினைவாற்றலை, 35% மேம்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, புதினா-சுவை மற்றும் அன்னாசி சுவை கொண்ட சூயிங்கம் கவனத்தையும் அறிவாற்றல் செயல்திறனையும் அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது.
சூயிங்கத்தின் பலன்கள்
நெஞ்செரிச்சலின் போது, சூயிங்கம் மென்றால், உங்கள் உணவுக்குழாயில் இருந்து அமிலத்தை நீக்குகிறது. சூயிங்கமை மெல்லும்போது அதிக உமிழ்நீர் உருவாகிறது. இதனால் பல் சிதைவு, அரிப்பு மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் மூலம் ஏற்படக்கூடிய பிற வாய்வழி சேதங்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறது. சர்க்கரை இல்லாத, இஞ்சி சுவை கொண்ட சூயிங்கம், குமட்டல் உள்ளவர்களுக்கு அருமருந்தாகிறது. ஒரு ஆய்வில், அறுவைசிகிச்சைக்குப் பிறகு, உடல்நிலை சரியில்லாமல் உணர்ந்த பெண்கள், பெப்பர்மின்ட் கம் மெல்லும் போது, வாந்தியிலிருந்து நிவாரணம் கிடைத்தது. சூயிங்கம் மூலம், நீங்கள் தினசரி உட்கொள்ளும் அதிகப்படியான கலோரிகளைக் குறைக்கலாம். நீங்கள் சூயிங்கத்தை மெல்லுவதால், வேறு எதையும் சாப்பிட விரும்பவில்லை என உங்கள் மூளைக்கு சமிக்ஞை செய்யப்படும். இது உங்கள் பசியை கட்டுப்படுத்துகிறது.