அரைஞாண் கயிறு கட்டுவது எதற்காக என உங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு கட்டுவது வழக்கம். சிலர் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை காரணமாக காட்டுவார்கள். சிலரோ, வீட்டில் பெரியவர்கள் கூறுகிறார்கள் என காட்டுவார்கள். ஆனால், நாகரீகத்தை விரும்பும் இளம்தலைமுறையினர், அதன் மகத்துவத்தை அறியாமல், மூட நம்பிக்கை என புறம்தள்ளிவிடுவார்கள். அரைஞாண் கயிறு கட்டுவது ஆன்மிகம் மட்டுமின்றி அறிவியலும் நிறைந்துள்ளது என அறிவீர்களா? அரைஞாண் கயிறு கட்டுவதன் நன்மைகள் பற்றி இதோ இந்த கட்டுரையில் காண்போம்: அரை என்றால், உடம்பில் பாதி. அதாவது உங்கள் இடுப்பு பகுதி. ஞாண் என்றால் கயிறு. இடுப்பில் கட்டப்படும் கயிறு என்பதால், அரைஞாண் கயிறு என அழைக்கப்படுகிறது.
அரைஞாண் அணிவதன் காரணம்
இந்த கயிறு இடுப்பு பகுதியில் கட்டப்படுவதால், ஆண்களுக்கு, அதிலும் குறிப்பாக உடல் பருமன் இருக்கும் ஆண்களுக்கு ஹெர்னியா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆண்களுக்கு ஏற்படும், ஆண்மை கோளாறுகளை தடுக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கும், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் முதுகு வலி குறையும் என்பது பெரியவர்கள் கூற்று. தற்போது பிரபலமாக இருக்கும் ஸ்டெம் செல் எனப்படும் தொப்புள்கொடியின் மகத்துவத்தை முன்னரே அறிந்துள்ளனர் முன்னோர்கள். சில நேரங்களில் அரைஞாண் கயிறில் குப்பிகள் அணிவதுண்டு. அந்த குப்பியில் தொப்புள் கொடியை பாதுகாத்து வைப்பார்கள். ஆன்மீகத்தின் படி, கருப்பு நிற கயிறு அணிவதால், எதிர்மறை சக்திகள் நம்மை அண்டாது. அதனால் உடலுக்கும், மனதிற்கும் பாதுகாப்பு.