
ஃபேஷன் என்ற பெயரில் பிரபல நிறுவனம் விளம்பரப்படுத்திய டவல் ஸ்கர்ட் இணையத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது
செய்தி முன்னோட்டம்
ஆடம்பர பேஷன் நிறுவனங்கள் தங்கள் புதுமையான யோசனைகளுக்கு பெயர் பெற்றவை.
இருப்பினும், ஆடம்பரமான பொருட்களுக்கு அதிகப்படியான விலைகளும் நிர்ணயிப்பதுண்டு.
உதயத்திற்கு சமீபத்தில், Hugo Boss நிறுவனத்தின் ஃபிளிப்-ஃப்ளாப்ஸ் செருப்பு ஒன்று ₹9,000 க்கு விற்கப்பட்டது, மீம் மெட்டீரியல் ஆனது.
இப்போது, பிரான்ஸைத் தலைமையிடமாகக் கொண்ட Balenciaga நிறுவனம், ₹76,990 விலையில் அசத்தலான "டவல் ஸ்கர்ட்டை" அறிமுகப்படுத்தியுள்ளது. இதை பார்த்த இணையவாசிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
காரணம், டவல் ஸ்கர்ட் என்பது, சாம்பல் நிற டெர்ரி பருத்தி துணியால் ஆன டர்கி டவல் (Turkey Towel) ஆகும்.
முழங்கால் வரை பாவாடையாக அணியப்படும் இந்த 'ஸ்கர்ட்'-ஐ, இந்த நிறுவனம் 'ஸ்பிரிங் 2024' கலெக்ஷன்ஸ்-இன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தவுள்ளது.
card 2
குளியல் துண்டை, பாவாடை ஆக்கி விற்பனை செய்யும் அபத்தம்
இது இருபாலரும் அணியக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாவும், இதனை இடுப்பில் மாற்றுவதற்கு ஏதுவாக இரண்டு பொத்தான்களும் தரப்பட்டுள்ளது.
மேலும், துண்டின் (ஸ்கர்ட்) முன்புறத்தில் Balenciaga லோகோ எம்ப்ராய்டரி போடப்பட்டுள்ளது.
இந்த டவல் ஸ்கர்ட், இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. பலரும் இந்த நிறுவனத்தை விமர்சித்து வருகின்றனர்.
மிகக் குறைந்த விலையில் வாங்கக்கூடிய ஒரு சாதாரண துண்டை, பாவாடை ஆக்கி, அதை பல்லாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வது அபத்தமானது என கூறி வருகின்றனர்.
உலகில் பலரும், குளித்து விட்டு, துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு குளியலறை விட்டு வெளிவருவார்கள். அதையே ஃபேஷன் என்ற பெயரில் விற்பனை செய்கிறது இந்த நிறுவனம்.
IKEA நிறுவனமும் இதை பயன்படுத்தி, தங்கள் நிறுவன துண்டை விளம்பரப்படுத்தி, 'தக் ஃலைப்' செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.