நீங்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையா? அந்த பழக்கத்திலிருந்து மீள்வது எப்படி?
உங்கள் தினசரி வேலைகளை இலகுவாக்கவும், உறவுகளுடன் தொடர்பை பேணுவதற்கும், தினசரி செய்திகளை உங்கள் கையடக்கத்துக்குள் கொண்டு வருவது ஸ்மார்ட்போன்கள். சில நேரங்களில், மன அழுத்தத்துடன் இருக்கும் போது, ஒரு பொழுதுபோக்கு பொருளாகவும் நமக்கு கை கொடுப்பது இவ்வகை போன்கள். ஆய்வுகளின்படி, ஒரு வழக்கமான ஸ்மார்ட்போன் பயனர், தினசரி, 2,617 முறை தன்னுடைய போனை தொடுகிறாராம்! இருப்பினும், ஸ்மார்ட்ஃபோன்களின் அதிகப்படியான பயன்பாடு, ஒரு வித போதையாகும். இதுபோன்ற அதீத பயன்பாடு, மனச்சோர்வை ஏற்படுத்தும், மற்றும் உங்கள் கண்பார்வையும் பாதிக்கும். நீங்கள் ஸ்மார்ட்போன் மீது அடிமையாக இருப்பதாக உணர்ந்தால், அதிலிருந்து வெளிவர சில டிப்ஸ்: செல்போன் பயன்பாட்டை கண்காணிக்கவும்: ஒரு ஆய்வின் படி, கல்லூரி மாணவர்கள் தினமும், 8-10 மணி நேரம் தங்கள் ஸ்மார்ட்ஃபோனில் செலவிடுகிறார்கள்.
அட்டவணை பயன்படுத்தி, போனை பயன்படுத்த துவங்குங்கள்
ஒரு குறிப்பிட்ட இலக்கை அமைத்து, QualityTime, Checky போன்ற ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டு டிராக்கர் பயன்பாடுகளை பயன்படுத்தி, உங்கள் மொபைல் பயன்பாடு நேரத்தை கண்கணிக்க துவங்குங்கள். மனநிலையை உற்சாகமூட்டும் மற்ற செயல்களில் ஈடுபடுங்கள்: பொதுவாக, ஸ்மார்ட்போனில், சமூக ஊடகங்களை பார்ப்பது, உங்கள் மனநிலையை உற்சாகமூட்டும். அதனால்தான், இது உங்களை அடிக்கடி பயன்படுத்த தூண்டுகிறது. அதனால், உங்கள் மனதிற்கு பிடித்த மற்ற ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுங்கள். உதாரணமாக, ஓவியம், கவிதை, தோட்டக்கலை. ஒரு அட்டவணையை பின்பற்றவும்: உங்கள் மொபைலில் அலாரம் செட் செய்து, உங்கள் மொபைலை கையாள்வதை குறைக்கவும். தேவையற்ற அறிவிப்புகளை முடக்கவும்: பல நேரங்களில் செயலிகளில் இருந்து வரும் அறிவிப்புகள் தான், உங்களை தூண்டும் காரணியாகிறது. அதனால், தேவையற்ற அறிவிப்புகளை ஆப் செய்வது நல்லது.