
டிஜிட்டல் திரை ஒளி, உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது எனத்தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
தற்போதைய டிஜிட்டல் உலகத்தில், பள்ளி குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரை, ஏதேனும் ஒரு கேட்ஜெட்டை பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். படம் பார்க்க, செய்திகள் படிக்க, சமூக வலைத்தளத்தில் உலவ, கேம்ஸ் விளையாட என பல செயலிகள் அந்த டிஜிட்டல் சாதனத்தில் உள்ளது.
ஆனால், அந்த டிஜிட்டல் சாதனத்தில் இருந்து வெளிப்படும், நீல ஒளிக்கதிர் பற்றி தெரியுமா உங்களுக்கு?
ஒளியின் ஸ்பெக்ட்ரமில் உள்ள ஒவ்வொரு நிறமும், வெவ்வேறு அலைநீளம் மற்றும் ஆற்றல் மட்டத்தைக் கொண்டுள்ளது. அதில், நீல நிற ஒளிக்கதிர், மற்ற நிறங்களை விட குறைந்த அலைநீளத்தையும், அதிக ஆற்றலையும் கொண்டுள்ளது.
நமது உடலின், சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்துவதற்கு, நீல அவசியம் என்றாலும், அதை அதிகமாக வெளிப்படுத்துவது, உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும்.
உடல் ஆரோக்கியம்
நீல ஒளியின் வெளிப்பட்டால், உடலில் ஏற்படும் கோளாறுகள்
டிஜிட்டல் திரையில் இருந்து நீல ஒளியின் அதிகப்படியான வெளிப்பாடு மெலடோனின் உற்பத்தியை குறைக்கிறது.
மெலடோனின் என்பது, தூக்கம்-விழிப்பு சுழற்சிகளை தீர்மானிக்கும் ஒரு சுரப்பி. இரவு நேரங்களில், நீல ஒளிக்கு நம்மை வெளிப்படுத்தினால், மூளையானது, அது இன்னும் பகல்நேரம் என்று ஏமாற்றலாம். இதனால் நம் உடலில் மெலடோனின் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டு, தூங்குவதை கடினமாக்குகிறது.
இரவு தூக்கம் கெடுவதனால், மனசோர்வும் மற்ற மனநல பிரச்சனைகளும் உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அதோடு, திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளிக்கதிர், உங்களுக்கு கண் சோர்வை ஏற்படுத்தும்.
ஏனென்றால், நீல ஒளி, மற்ற நிறங்களை விட எளிதில் சிதறி, நம் கண்களுக்கு கவனம் செலுத்துவதை கடினமாக்குகிறது.