
கண் பார்வை பறிபோகும் அபாயம் கொண்ட ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் என்றால் என்ன?
செய்தி முன்னோட்டம்
ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோமால் பார்வையை இழந்தார் என்ற செய்தி சமீபத்தில் வைரல் ஆனது.
அப்படி பார்வையை பாதிக்கும் ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் என்றால் என்ன?
ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயது பெண்மணி ஒருவர், அநேக இரவுகளில், இருட்டில் தனது ஸ்மார்ட்போனை தொடர்ந்து உபயோகித்ததால், சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பார்வையை இழக்க நேர்ந்தது.
இது பற்றி, ட்விட்டரில் பதிவிட்ட நரம்பியல் நிபுணரான டாக்டர் சுதிர் குமார், அந்த பெண்ணிற்கு ஒன்றரை ஆண்டுகளாக கடுமையான பார்வை குறைபாடு அறிகுறிகள்- பார்வையில் பிரகாசமான ஃப்ளாஷ்கள், இருண்ட ஜிக்-ஜாக் கோடுகள் மற்றும் சில நேரங்களில் பொருட்களைப் பார்க்கவோ அல்லது கவனம் செலுத்தவோ இயலாமை போன்றவை இருந்தன எனக்கூறினார்.
ஸ்மார்ட்போன்
கண்களை பாதுகாக்க 20-20-20 ரூல்
"பல வினாடிகளுக்கு அவளால் எதையும் பார்க்க முடியாத தருணங்கள் இருந்தன - குறிப்பாக இரவில் அவள் கழிப்பறையைப் பயன்படுத்த எழும்போது மிகவும் சிரமப்பட்டார்," என்று அவர் மேலும் கூறினார்.
தனது ஆய்வில், "தினமும் இரவில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, இருட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தியுள்ளார்" எனக் கண்டறிந்துள்ளார்.
ஆனால் எந்த மருந்துகளையும் பரிந்துரைக்கவில்லை மாறாக, ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டைக் குறைக்க பரிந்துரைத்ததாக அவர் கூறினார்.
அந்தப் பெண் அவருடைய ஆலோசனையைப் பின்பற்றி, அவசியமானால் தவிர, தனது ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தி, ஒரு மாதத்தில் பார்வையை திரும்பப்பெற்றார்.
டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தும் போது, 20-20-20 ரூலை பயன்படுத்துமாறு, டாக்டர் குமார் வலியுறுத்துகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம்
A common habit resulted in severe #vision impairment in a young woman
— Dr Sudhir Kumar MD DM🇮🇳 (@hyderabaddoctor) February 6, 2023
1. 30-year old Manju had severe disabling vision symptoms for one and half years. This included seeing floaters, bright flashes of light, dark zig zag lines and at times inability to see or focus on objects.