மனிதர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள 5 இடங்கள் - ஓர் பார்வை
உலகம் முழுவதும் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தாலும், ஒருசில இடங்களுக்கு மனிதர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எவ்வளவு முயற்சித்தாலும் உள்ளே நுழைய அனுமதியில்லா 5 இடங்கள் குறித்துத்தான் நாம் இந்த தொகுப்பில் காண போகிறோம். முதலாவதாக ஐஸ்லாந்திலுள்ள சர்ட்சி: இது 1963 முதல் 1967வரை அங்குள்ள எரிமலை வெடித்ததன் மூலம் உருவான இடமாகும். சுற்றுசூழல் ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு மட்டுமே இங்கே அனுமதி. அடுத்து, பிரேசிலிலுள்ள பாம்பு தீவு: இங்கு 4000க்கும் மேற்பட்ட கடுமையான விஷத்தன்மை கொண்ட பாம்புகள் உள்ளதாம். இந்த தீவிற்குள் மனிதர்கள் சென்று வெளியேவரும் வாய்ப்பு மிகக்குறைவு என்பதால் பொதுமக்களுக்கு இங்கு செல்ல அனுமதியில்லை. மூன்றாவதாக அமெரிக்காவில் உள்ள நிஹாவ் தீவு: கிட்டத்தட்ட 160குடியிருப்பாளர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
ரஷ்யாவில் தெற்கு யூரல் மலைகளுக்குள் அமைந்துள்ள மறைக்கப்பட்ட நகரம்
இத்தீவில் குடும்பத்தொடர்பில் உள்ளோர் மற்றும் அமெரிக்க கடற்படையில் இணைப்பில் இருப்போருக்கு மட்டுமே இத்தீவினை சுற்றிப்பார்க்க அனுமதியாம். இந்த தீவின் சுற்றுசூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பினை மனதில் கொண்டு இக்கட்டுப்பாட்டினை அத்தீவின் அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது. அடுத்து நார்வேயிலுள்ள டூம்ஸ்டேவால்ட்: இது உலகிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து 100 மில்லியன் விதைகள் கொண்ட தொகுப்பினை கொண்டதாகும். நம்முடைய கிரகமே அழியும் நிலைக்கு வந்தாலும், உலகின் தாவரங்களை புத்துயிர் பெறச்செய்யுமாம். 2008ல் வெளியிடப்பட்ட இப்பெட்டகம் பூகம்பம், வெடிப்புகள் போன்றவைகளுக்கு எதிரான மீள்திறனுடன் கிட்டத்தட்ட 200ஆண்டுகள் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இறுதியாக ரஷ்யாவில் தெற்கு யூரல் மலைகளுக்குள் அமைந்துள்ள மறைக்கப்பட்ட நகரமான மெஜ்கோரியே: மெஜ்கோரியேவில் 2 பாட்டாலியன்கள் காவலாளிகளாக நிற்பார்களாம். எந்நிலையிலும் இதற்குள் நுழைய அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.