உங்கள் வீட்டில் யாருக்கேனும் மன அழுத்தம் உள்ளதா? அவர்களுக்கு ஆதரவு தருவதற்கான வழிகாட்டி
உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவை ஏற்பட்டால், அவர்களுக்கு உதவுவது கடினமாக இருக்கலாம். என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், அவர்களுக்கு உதவ முடியுமா என சந்தேகிக்கலாம். உங்களுக்கு உதவ ஒரு வழிகாட்டி இதோ: உங்களைப் பயிற்றுவிக்கவும்: மனச்சோர்வு என்றால் என்ன, அது மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி முதலில் தெளிவாக புரிந்துகொள்ளுதல் அவசியம். அவர்கள் எதனால் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால், அவர்களுக்கு உதவ உங்களால் எளிதில் முடியும். மருத்துவர் உதவியை நாடவும்: சில நேரங்களில், மனச்சோர்வடைந்தவர்கள் ஏன் அப்படி உணர்கிறார்கள் என்பதை உணர மாட்டார்கள். அவர்கள் மனச்சோர்வின் அறிகுறிகளை அறிந்திருக்க மாட்டார்கள். அது போன்ற நேரத்தில், மருத்துவர்கள் தலையீடு அவசியம்
அன்றாட பணிகளுக்கு ஆதரவு தாருங்கள்
அவர்களின் அன்றாட பணிகளுக்கு உதவி, ஆதரவு தாருங்கள்: மனச்சோர்வை நிர்வகிப்பதற்கான சிகிச்சைகள் முக்கியமானவை என்றாலும், மன சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் அன்றாடப் பணிகளுக்கு உதவி தேவைப்படலாம். மளிகைப் பொருட்களை வாங்குவது, துணி துவைப்பது போன்ற விஷயங்களில் அவர்களுக்கு உதவ நீங்கள் முன்வரலாம். தற்கொலை எண்ணங்கள் தலை தூக்கும்: மனச்சோர்வு உள்ளவர்களுக்கு, தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் அதிகம் ஏற்படும். இந்த அறிகுறிகளை தீவிரமாக எடுத்து உடனடியாக அலசோனைகளும், நிபுணர்கள் உதவியும் நாடுவது அவசியம்.ஆதரவையும், நம்பிக்கையையும் கொடுங்கள்: மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு, நேர்மறை எண்ணங்களை ஊக்குவித்து, அவர்களின் சுயநம்பிக்கையை அதிகப்படுத்துவது அவசியம். சிகிச்சைகளை தவறாது கடைபிடிக்கிறார்களா என கவனிப்பதும் முக்கியம். அவர்களுக்கு நீங்கள் எப்போதும் ஆதரவாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையை தருவது முக்கியம்