
"என்னையா வேலை விட்டு தூக்கிறிங்க?" என பழிக்குப்பழி வாங்கிய ஸ்டார்பக்ஸ் ஊழியர்
செய்தி முன்னோட்டம்
பிரபலமான காபி சங்கிலி நிறுவனமான ஸ்டார்பக்ஸில் இருந்து நீக்கப்பட்ட ஒரு ஊழியர், அந்த நிறுவனத்தின் மெனுவில் இடம்பெற்றுள்ள பல பிரபல காபி வகைகளின் ரெசிபிகளை எக்ஸ் தளத்தில் கசிய விட்டுள்ளார்.
தன்னை பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் மீது தன்னுடைய பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படும் இந்த செயல், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது இவர் மட்டுமல்ல. இதற்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பலரும், இதேபோல அந்நிறுவனத்தின் பிரபல உணவுகளின் செயல்முறையை இணையத்தில் கசியவிட்டு, பழிதீர்த்து கொண்டுள்ளனர்.
'ஒவ்வொரு காபி பிரியரும் தங்களுக்குப் பிடித்தமான காபி வகைகளை இனி வீட்டிலேயே செய்துகொள்ளலாம். தேவையின்றி பணத்தை வீணடிக்க வேண்டாம்' என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் காபி ரெசிபிகளை இணையத்தில் கசியவிட்ட ஊழியர்
A Starbucks employee got fired and she posted every Starbucks drink recipe. you’re welcome 😂😂😂 pic.twitter.com/dA8v2jsOET
— Ꮶᴀʟʏᴀɴ ×͜× (@IamKalyanRaksha) October 14, 2023