ஆரோக்கியமான காலை உணவில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்?
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, காலை உணவைத் தவிர்ப்பது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு அளவுகள் மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நோய்களை உருவாக்கும். மேலும், இவை அனைத்தும் இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும். எனவே, ஆரோக்கியமான காலை உணவில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். முழு தானியங்கள் முழு தானியங்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூறுகிறது. தானியங்களில் நம் உடலுக்கு தேவியான வைட்டமின்களும் பைபர்களும் அதிகம் உள்ளன. புரதம் முளைத்த/சமைத்த பருப்பு வகைகள், சோயா, நட்ஸ்கள், முட்டை, பனீர், சீஸ் போன்ற புரசத்துகளை காலை உணவில் சேர்த்துக்கொள்வது மிக முக்கியமாகும்.
காய்கறிகள்/பழங்கள்
காய்கறிகளையும் பழங்களையும் காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், அதை மட்டும் காலை உணவாக சாப்பிடுவது தேவையான சத்துக்களை நமது உடலுக்கு தராது. முக்கியமாக, ஒரே ஒரு பழத்தை காலை உணவாக சாப்பிடுவது உடலுக்கு எந்த வகையிலும் நன்மை செய்யாது. பழங்கள் இல்லையென்றால், கீரை, தக்காளி, மிளகுத்தூள் மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகளைச் சேர்க்க முயற்சிக்கவும். நாம் அவற்றை ஆம்லெட், உப்மா அல்லது ஒரு சைடு டிஷ்சாக சேர்க்கலாம். ஆனால், காலை உணவில் சர்க்கரை சேர்த்துக்கொள்ளக் கூடாது. முடிந்தால் பால் உணவுகளையும் காலையில் எடுத்துக்கொள்ளலாம்.