NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கட்டாயம் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாத 5 உணவு பொருட்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கட்டாயம் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாத 5 உணவு பொருட்கள்
    இந்த பொருட்களை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது.

    கட்டாயம் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாத 5 உணவு பொருட்கள்

    எழுதியவர் Srinath r
    Oct 30, 2023
    05:47 pm

    செய்தி முன்னோட்டம்

    உணவு பொருட்களை நீண்ட காலத்திற்கு பிரஷ்ஷாக வைத்திருப்பதற்கும், அது கெட்டு விடாமல் இருப்பதற்காகவும் நாம் அவற்றை ஃப்ரிட்ஜில் வைப்போம்.

    ஆனால் சில உணவுப் பொருட்கள் ஃப்ரிட்ஜில் வைப்பதை விட, ஃப்ரிட்ஜில் வைக்காமல் இருந்தால் தான் அதிக நன்மைகளை வழங்கும். இந்த தொகுப்பில் அவ்வாறான 5 உணவுப் பொருட்களை பார்க்கலாம்.

    தக்காளி- நாம் அனைவரும் தக்காளிகளை ஃப்ரிட்ஜில் வைக்கும் தவறை செய்திருப்போம்.

    ஆனால் தக்காளிகளை ஃப்ரிட்ஜில் வைத்தால், அவற்றில் உள்ள என்சைம் குறைவான வெப்பநிலையால் செயலாற்ற தொடங்கும்.

    இதன் மூலம் தக்காளி சீக்கிரம் அழுகிவிடும், மேலும் ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளிகளில் அதன் நிறம், சுவை, மணம் உள்ளிட்டவையும் குறைகிறது.

    2nd card

    கட்டாயம் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாத 5 உணவு பொருட்கள்-2

    அவகேடோ(வெண்ணெய் பழங்கள்)- அவகேடோ பழங்களை, ஃப்ரிட்ஜில் வைப்பதன் மூலம், அது இயற்கையாக பழுப்பது தடைபடுகிறது. இது அவற்றை நுகர்வுக்கு தகுதியற்றதாக ஆக்குகிறது.

    மேலும் ஃப்ரிட்ஜில் உள்ள குளிர்ந்த சீதோசன நிலை, அவகேடோ பழங்களின் அமைப்பை பாதித்து விரைவில் அழுக செய்கிறது.

    இதனால் அவகேடோ பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்காமல் தவிர்ப்பது நல்லது.

    ரொட்டி(பிரட்)- நீங்கள் பிரட்டை ஃப்ரிட்ஜில் வைப்பவராக இருந்தால் முதலில் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும். ஃப்ரிட்ஜில் உள்ள குறைந்த வெப்பநிலை ரொட்டியில் உள்ள மாவுச்சத்தை மீண்டும் படிகமாக்குகிறது.

    இது ரொட்டியை இறுகச் செய்து உண்பதற்கு கடினமானதாக ஆக்குகிறது.

    3rd card

    கட்டாயம் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாத 5 உணவு பொருட்கள்-3

    உருளைக்கிழங்குகள்- பலரும் உருளைக்கிழங்குகளை ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் கொண்டவர்கள் ஆக உள்ளனர். ஆனால் அவற்றை ஃப்ரிட்ஜில் வைப்பது புற்றுநோயை உண்டாக்கலாம்.

    உங்கள் ஃப்ரிட்ஜில் உள்ள குறைந்த வெப்பநிலை, உருளைக்கிழங்குகளில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து, சமைக்கும் போது புற்றுநோய் உண்டாக்கும் காசினோஜெனிக்( carcinogenic) பொருட்களை உருவாக்குவதாக சொல்லப்படுகிறது.

    அதனால் உருளைக்கிழங்குகளை சாதாரணமாக வெளியிலேயே வைப்பது நல்லது.

    தர்பூசணி, முலாம்பழங்கள்- தர்பூசணி, முலாம்பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்தால் அவை சீக்கிரமாக அழுகத் தொடங்கும். அதனால் தான் சூப்பர் மார்க்கெட்டில் கூட அவர்கள் இந்த பழங்களை ஃப்ரிட்ஜில் வைப்பது கிடையாது.

    மேலும் இவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, சுவை மற்றும் நிறத்தில் மாற்றம் ஏற்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உணவு குறிப்புகள்
    உணவுக் குறிப்புகள்
    புற்றுநோய்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உணவு குறிப்புகள்

    புரட்டாசி ஸ்பெஷல்: மலேசியாவில் இந்த சைவ உணவுகளை சாப்பிடலாமே! மலேசியா
    புரட்டாசி மாத ஸ்பெஷல் : சுவையான பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி ? புரட்டாசி
    புரட்டாசி ஸ்பெஷல்: ஸ்பாட் இட்லி செய்முறை உணவுக் குறிப்புகள்
    மேக்டொனல்ட்ஸ் ஸ்டைல் பிரட் பீட்சா பாக்கெட் செய்வது எப்படி? குழந்தைகள் உணவு

    உணவுக் குறிப்புகள்

    பார்ச்சூன் குக்கீகள் பின்னணியும், அதன் செய்முறையும் உணவு குறிப்புகள்
    ஃபேன்டா, கோக், பெப்சி, ஐஸ் டீ, சூயிங் கம் - அஸ்பார்டேம் உணவு சோதனையில் சிக்கிய உங்கள் ஃபேவரைட் உணவுகள் புற்றுநோய்
    "இப்படியெல்லாமா?" என வியக்கவைத்த சாதனைகள் சில தேசிய ஊட்டச்சத்து வாரம்
    புரட்டாசி ஸ்பெஷல்: புரட்டாசி மாதத்தை 'Glance' உடன் கொண்டாடுங்கள்  புரட்டாசி

    புற்றுநோய்

    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக உடல் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ உடல் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் உடல் ஆரோக்கியம்
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா டென்னிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025