LOADING...
இன்று சர்வதேச பார்கின்சன் தினம் 2023: இந்த மூளைக் கோளாறுக்கான அறிகுறிகள் என்னென்ன?
இன்று சர்வதேச பார்கின்சன் தினம்

இன்று சர்வதேச பார்கின்சன் தினம் 2023: இந்த மூளைக் கோளாறுக்கான அறிகுறிகள் என்னென்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 11, 2023
08:59 am

செய்தி முன்னோட்டம்

பார்கின்சன் நோய் என்பது மூளை நரம்பு கோளாறாகும். இது பொதுவாக வயதானவர்களையே அதிகம் தாக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடல் நடுக்கம், விறைப்புதன்மை மற்றும் உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பில் சிரமம் போன்றவை ஏற்படும். இருப்பினும், இந்நோய் சில நேரங்களில் 50 வயதுக்குட்பட்டவர்களையும் கூட பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். எனினும், வயதானவர்களை இந்த நோய் பாதிக்கும் போது அதனுடன் மறதியும் ஏற்படுகிறது. 1817 ஆம் ஆண்டில் 'நடுங்கும் வாதம் பற்றிய கட்டுரை' என்ற பெயரில், இந்த நோய் பற்றி ஆய்வு கட்டுரை எழுதிய டாக்டர் ஜேம்ஸ் பார்கின்சனின் பிறந்தநாளை நினைவுகூரும் நாளாக இந்நாளை, தேர்வு செய்துள்ளனர்.

Parkinson Disease

பார்கின்சன் நோய் பாதிப்பு ஏற்படும் முன், உங்கள் உடலில் தென்படும் அறிகுறிகள்

ஹைபோஸ்மியா: அதாவது வாசனை உணர்வு குறைதல் அல்லது மூக்கின் வழியாக வாசனைகளை கண்டறியும் திறன் குறைதல். இது இந்த நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். மலச்சிக்கல்: நோயாளிக்கு நாள்பட்ட மலச்சிக்கல் இருந்தால், மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் மந்தமாக இருந்தால், அந்த நபருக்கு பார்கின்சன் நோய் தாக்கம் இருக்கக்கூடும். (REM) தூக்கம் சீர்குலைவு: ஒருவர் தூங்கிய பிறகும், உடல் ரீதியாக விழிப்புடன் செயல்படுகிறார் என்றாலோ,தூக்கத்தில் சம்மந்தமில்லாமல் பேசுவதோ, கத்துவதோ, அடிக்கடி விரும்பத்தகாத கனவுகள் காண்பதோ, பார்கின்சன் நோயின் துவக்கமாக இருக்கலாம். அதிகப்படியான உமிழ்நீர்: உணவை சரியாக மெல்லமுடியாமல் போவது, எச்சிலை விழுங்க வேண்டும் என்ற சுயசிந்தனை இல்லாமல் போவது போன்ற காரணங்களால், வாயிலிருந்து எச்சில் ஒழுகும்.