Page Loader
14 வயதில் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த, இளம் பணியாளர்
14 வயதில், மென்பொறியாளராக, எலான் மஸ்க்கின் நிறுவனத்தில் சேரும் சிறுவன், கைரன் குவாசி

14 வயதில் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த, இளம் பணியாளர்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 12, 2023
04:58 pm

செய்தி முன்னோட்டம்

எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம், பலரின் கனவு நிறுவனமாகும். தொழில்நுட்பத்தில் அபரிமித வளர்ச்சியை காணும் அந்த நிறுவனத்தில் சேர்ந்து, தனது கனவை நனவாக்கப்போகிறார் ஒரு 14 வயதான சிறுவன். கைரன் குவாசி பெயர்கொண்ட அந்த சிறுவன், சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்தவன். இவன், மஸ்க்கின் ஸ்டார்லிங்க் குழுவில், மென்பொருள் பொறியாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்த செய்தி வைரலாக தொடங்கியதும், அந்த சிறுவனை பற்றியும், அவன் இந்த நிறுவனத்தில் எப்படி சேர்ந்தான் என்பது பற்றியும் கூகிளில் பலரும் தேட துவங்கியுள்ளனர். அவர்களுக்காக ஒரு பதிவு. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்ததில் மட்டுமல்ல, சிறுவயதிலேயே சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் படித்து, பட்டம் பெற்ற இளம் பொறியாளரும் இந்த சிறுவன் தான்.

card 2

9 வயதிலேயே கணிதத்தில் பட்டம் பெற்ற கைரன்

கைரன், தனது ஒன்பதாவது வயதில், (Las Positas Community College) லாஸ் பொசிடாஸ் சமூகக் கல்லூரியில் சேர்ந்து மற்றும் அசோசியேட் ஆஃப் சயின்ஸ் (கணிதம்) பட்டம் பெற்றார். அதுமட்டுமில்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெஷின் லேர்னிங்(Machine Learning) தொழில்நுட்பத்தில், ஒரு பார்ச்சூன் 100 IT நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். தனது 11 வது வயதில், Intel Labsa நிறுவனத்தில், செயற்கை நுண்ணறிவு Internship பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வேலை குறித்து, தனது சமூக வலைதள பக்கத்தில், கைரன் குவாசி பதிவிட்டுள்ளார். அந்த பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.