Page Loader
அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களுக்கும் அரசியல் ஆர்வம்; மான் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களுக்கும் அரசியல் ஆர்வம்; மான் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 25, 2024
07:05 pm

செய்தி முன்னோட்டம்

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு கூட்டு முயற்சிகள் உதவும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரப் போராட்டத்தின்போது இத்தகையவர்கள் காட்டிய உற்சாகம் மீண்டும் 'விக்சித் பாரத்' என்ற இலக்கை அடைவதற்காகவும் வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மோடி தனது மாதாந்திர மான் கி பாத் வானொலி நிகழ்ச்சியில், எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலில் சேர வேண்டும் என்ற தனது சுதந்திர தின அழைப்பை அடுத்து, வாரிசு அரசியல் புதிய திறமைகளை நசுக்குகிறது என்று சில இளைஞர்கள் கூறியதாக தெரிவித்தார். மேலும், ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற தன்னுடைய அழைப்பை ஏற்று பலரும் அரசியலுக்கு வர தயாராக இருப்பதை அறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கூட்டு முயற்சி

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள்

கூட்டு முயற்சியால் அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களும் அரசியலில் முன்னேற முடியும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். அவர்களின் அனுபவமும், ஆர்வமும் நாட்டுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று மோடி கூறினார். 2047இல் இந்தியா விக்சித் பாரத் என்ற இலக்கை அடைய இளைஞர்கள் அரசியலிலும் இணைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த நடவடிக்கை இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்று மோடி கூறினார். தனது உரையில், இந்தியா தனது விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 23 அன்று தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாடியது என்று குறிப்பிட்டார்.