Page Loader
தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் 

தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் 

எழுதியவர் Sindhuja SM
Mar 19, 2024
12:36 pm

செய்தி முன்னோட்டம்

தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் அவமதிப்பு நோட்டீசுக்கு பதிலளிக்கத் தவறியதற்காக, பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தை உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக சாடியது. மேலும், பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத் என்பது யோகா குரு ராம்தேவால் இணைந்து நிறுவப்பட்ட நிறுவனமாகும். தடுப்பூசி மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்ததாக கடந்த வருடம் இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

India

உச்ச நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு பதஞ்சலி நிறுவனம் பதிலளிக்கவில்லை

இதனையடுத்து, ஆகஸ்ட்-23, 2022 அன்று, மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் ஆகியவற்றிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு, தவறான தகவல்களைக் பரப்பும் அனைத்து மருந்துவ விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. நவீன மருத்துவ முறைகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை பரப்ப வேண்டாம் என்று பதஞ்சலியிடம் உச்சநீதிமன்றம் மேலும் கேட்டுக் கொண்டது. இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு பதஞ்சலி நிறுவனம் பதிலளிக்கவில்லை. அதனால், அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.