NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் தமிழகத்தில் அரசியல் கொலை; மதுரையில் நாதக கட்சி துணைச் செயலாளர் வெட்டிக்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் தமிழகத்தில் அரசியல் கொலை; மதுரையில் நாதக கட்சி துணைச் செயலாளர் வெட்டிக்கொலை
    பாலசுப்பிரமணியன், மர்ம கும்பல் ஒன்றால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்

    மீண்டும் தமிழகத்தில் அரசியல் கொலை; மதுரையில் நாதக கட்சி துணைச் செயலாளர் வெட்டிக்கொலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 16, 2024
    12:59 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதன் பதட்டம் அடங்குவதற்குள்ளாகவே மதுரையில் மற்றொரு அரசியல் கொலை நடந்தேறியுள்ளது.

    இன்று (ஜூலை 16) காலையில், மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மர்ம கும்பல் ஒன்றால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நாதக கட்சி துணை செயலாளர் பாலசுப்பிரமணியன்.

    இவர் இன்று காலை தல்லாகுளம் பகுதியில் உள்ள வல்லபாய் ரோட்டில் சென்றபோது மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக அவரை கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளது.

    தப்பி ஓட முயற்சித்த பாலசுப்ரமணியனை விடாமல் ஓடஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளது அக்கும்பல்.

    ட்விட்டர் அஞ்சல்

    நாதக கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை

    அமைச்சர் PTR வீட்டின் அருகிலே நாம் தமிழர் முக்கிய புள்ளி ஓட ஓட வெட்டி படுகொலை#naamtamilarkatchi #madurai pic.twitter.com/871XPZbHBi

    — Thanthi TV (@ThanthiTV) July 16, 2024

    விசாரணை

    காவல்துறை விசாரணை

    மர்ம கும்பல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாலசுப்ரமணியன் இறந்ததாக கூறப்படுகிறது.

    இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தல்லாகுளம் போலீஸார், பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆரம்ப கட்ட விசாரணையில், பாலசுப்பிரமணியனுக்கும் அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    எனினும் இதில் அரசியல் விவகாரம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் ஆயுத புழுக்கமும், அரசியல் கொலைகளும் அதிகரித்து வருகின்றன என்பதையே இந்த சம்பவம் மேலும் வலுவாக எடுத்துக்காட்டுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    தமிழக அரசு
    தமிழக காவல்துறை
    தமிழகம்

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    மதுரை

    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து  கேரளா
    பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் மதுரை அழகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது திருவிழா
    கடும் மழையால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்திற்கு தடை மழை
    ஒடிசா முதலமைச்சரின் வாரிசாகிறாரா ஒரு தமிழர்? முறையாக நவீன் பட்நாயக்கின் கட்சியில் சேர்ந்தார் வி.கே.பாண்டியன் ஒடிசா

    தமிழக அரசு

    தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாள்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தமிழக முதல்வர்
    எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ராஜினாமா தமிழ்நாடு
    நோ பவர்கட்: பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு பொதுத்தேர்வு
    மிக்ஜாம் புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 6000 ரூபாய் டெபாசிட்  தமிழ்நாடு

    தமிழக காவல்துறை

    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு சென்னை

    தமிழகம்

    17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை புதுச்சேரி
    15 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025