
உலக பாரம்பரிய தினம் 2023: இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புனரமைக்கப்பட்ட புராதன சின்னங்கள்
செய்தி முன்னோட்டம்
பாரம்பரிய சின்னங்கள் அல்லது புராதன சின்னங்கள், ஒரு இடத்தின் வரலாற்றை நினைவூட்டுவதுடன், அந்த நாட்டின் வளமான பாரம்பரியத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. அந்த சின்னங்களை சுற்றி இருக்கும் வரலாற்று கதைகள், சுற்றுலாவாசிகளை ஈர்க்கும்.
அத்தகைய நினைவு சின்னங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
இந்த உலக பாரம்பரிய தினத்தில், இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புனரமைக்கப்பட்ட முக்கியமான வரலாற்று சின்னங்களை பற்றி காண்போம்:
தாஜ்மஹால்: ஏறக்குறைய நான்கு நூற்றாண்டு பழமையான தாஜ்மஹால், 'காதலின் நினைவுச்சின்னம்' என்று அழைக்கப்படுகிறது. முகலாய பேரரசர் ஷாஜஹானால் தனது அன்பு மனைவி மும்தாஜ்காக, 1631-இல் கட்டப்பட்டது. காற்றுமாசு காரணமாக, அதன் வெள்ளை பளிங்கு கற்கள், மஞ்சள் நிறமாக மாறத்துவங்கியது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் நடவடிக்கைகள் காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்னர், தாஜ்மஹால் புனரமைக்கப்பட்டது
card 2
நினைவு சின்னங்களை பராமரிக்க ASI நடவடிக்கைகள் எடுத்து வருகிறது
செங்கோட்டை: செங்கோட்டை அல்லது லால் கிலா, பல முகலாய பேரரசர்களின் வசிப்பிடமாக செயல்பட்ட ஒரு வரலாற்று கோட்டையாகும். இதுவும் ஷாஜஹானால், 1638 இல் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 70-80% கோட்டை அழிக்கப்பட்டது என்றாலும், அதன் ஒரு சில பகுதிகளை, அவர்கள் ராணுவ தளவாடங்களுக்கு பயன்படுத்தினர். சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய அரசாங்கம் அதை மீட்டெடுக்க பல நடவடிக்கைகளை எடுத்தது. கடைசியாக 2019-ஆம் ஆண்டில், புனரமைக்கப்பட்டது.
சார் மினார்: 1591-இல் கட்டப்பட்ட சார் மினார், ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று அடையாளமாகும். இதன் வெளிப்புற பிளாஸ்டர் உறிய துவங்கியதால், 2021-ஆம் ஆண்டில், ASI பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டது.
ஜாலியன் வாலா பாக்: சுதந்திர போராட்டத்தின் நினைவாக இருக்கும் இந்த சின்னத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.