Page Loader
உலக உணவு பாதுகாப்பு தினம் 2023: ஆண்டுதோறும் 10ல் ஒருவர் பலி! 
உலக உணவு பாதுகாப்பு தினம் 2023

உலக உணவு பாதுகாப்பு தினம் 2023: ஆண்டுதோறும் 10ல் ஒருவர் பலி! 

எழுதியவர் Arul Jothe
Jun 07, 2023
11:25 am

செய்தி முன்னோட்டம்

உலக உணவு பாதுகாப்பு தினம், ஜூன் 7ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக உணவு பாதுகாப்பு தினத்தில், 'உணவு தர நிலைகள் உயிர்களை காக்கும்' என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்படுகிறது. காற்றும், தண்ணீரும், உயிர் வாழ அடிப்படைத் தேவையாக இருக்கும் நிலையில், உணவும் நமக்கு அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு பொருட்களும், அவற்றின் தரமும், மிகவும் முக்கியம். தற்போது டின்னில் அடைக்கப்பட்ட, பேக் செய்யப்பட்ட உணவுகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அத்தகைய உணவுப் பொருட்களை உட்கொள்வது தீமைகளை விளைவிக்கும். எனவே, உணவுப் பொருட்களை உட்கொள்ளும் முன் அவற்றின் உற்பத்தி, பதப்படுத்துதல், சேமிப்பு, விநியோகம், ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

World Food Safety Day 

உணவு பாதுகாப்பு துறை

உலகளவில் ஒவ்வொரு ஆண்டிலும், சுமார் 10 பேரில் ஒருவர் உணவினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, பல பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை சோதனைகளையும் நடத்தி வருகின்றனர். சமீபத்தில், சென்னை VR மாலில் செயல்பட்டு வந்த ஒரு பிரபல உணவகத்தில், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவில் புழுக்கள் உயிருடன் நெளிந்து சென்றது குறிப்பிடத்தக்கது. இதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. தற்போது வெயில் காலம் என்பதால், மக்கள் பழமுதிர் சோலைகளிலும், தேநீர் கடைகளிலும் அதிகம் குவிகின்றனர். இதனால் சிறிய முதல் பெரிய கடைகள் வரை உணவு பாதுகாப்பு துறை சோதனை நடத்தி வருகின்றனர். உங்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, இந்நாள் முதல், நீங்கள் தேர்ந்தெடுக்கும் உணவுகளின் தரத்தையும் அறிந்து உணவருந்துங்கள்.