Loading...
'இது பணியிட பாலியல் துன்புறுத்தல் இல்லையா?' தவெக எம்எல்ஏ மீதான புகாரில் போலீஸ் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
தவெக எம்எல்ஏ மீதான புகாரில் போலீஸ் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

'இது பணியிட பாலியல் துன்புறுத்தல் இல்லையா?' தவெக எம்எல்ஏ மீதான புகாரில் போலீஸ் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 22, 2026
07:44 pm

செய்தி முன்னோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கடுமையாக விமர்சித்துள்ளார். இது பணியிட பாலியல் துன்புறுத்தல் இல்லையா என கேள்வி எழுப்பிய நீதிபதி விக்டோரியா கௌரி, மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் அளித்த பிறகும் காவல்துறை இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என விளக்கம் கேட்டுள்ளார்.

எம்எல்ஏ மறுப்பு

நவம்பர் 9 கனிமொழி பதிவு மற்றும் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுப்பு

கடந்த நவம்பர் 9 ஆம் தேதி சமூக வலைதளத் தகவல்களை மேற்கோள் காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட திமுக எம்பி கனிமொழி, எம்எல்ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச செய்திகள் அனுப்பி தொல்லை கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

மறுநாள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த அருள் விக்னேஷ், திமுக அசிங்கமான அரசியல் செய்வதாகவும் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கொண்ட ஆட்சியர் பங்களாவிற்குள் தன்னால் எப்படி நுழைய முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதே நாளில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அதிகாரப்பூர்வ புகார் கிடைத்தால் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் விளக்கம்

திமுக மற்றும் அதிமுக புகார்களும் சட்ட அமைச்சர் நிர்மல் குமாரின் விளக்கமும்

நவம்பர் 12-ஆம் தேதி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி இவ்விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி டிஜிபியிடம் புகார் அளித்ததோடு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் நடவடிக்கை கோரினார்.

ஆனால் தமிழக சட்ட அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் இந்த புகார்கள் ஆதாரமற்றவை என்றும் கனிமொழி உண்மையை சரிபார்த்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 17 ஆம் தேதி இவ்விவகாரத்தில் மகளிர் ஆணையம் தலையிட வேண்டும் என திமுக எம்பி கனிமொழி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT