டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு
செய்தி முன்னோட்டம்
டெல்லி நீதிமன்றத்தில் இன்று(ஏப் 21) காலை நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த பெண்ணை நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
சாகேத் என்ற மாவட்ட நீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நிதித் தகராறு தொடர்பான வழக்கு விசாரணைக்காக அந்தப் பெண் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் அவரை துப்பாக்கியால் சுட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் 4 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன், தென்மேற்கு டெல்லியின் துவாரகாவில் ஒரு வழக்கறிஞரை பைக்கில் வந்த இருவர் சுட்டுக் கொன்றனர்.
details
டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கி சூடு
தாக்குதல் நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள் போல் நடித்து நீதிமன்றத்திற்குள் நுழைந்ததாக கூறப்பட்டது.
இந்த கொலையை அடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
"வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம்" டெல்லியில் நிறைவேற்றப்படாவிட்டால், வழக்கறிஞர்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர்-24ஆம் தேதி, வழக்கறிஞர்கள் போல் உடையணிந்த இரண்டு துப்பாக்கி ஏந்திய நபர்கள், கோகி என்கிற ஜிதேந்தர் மான் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது, போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதால் தாக்குதல்காரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ரோகினி நீதிமன்றத்தில், இரண்டு வழக்கறிஞர்களுக்கும், அவர்களது கட்சிக்காரர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பை அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.