Page Loader
ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் தங்க போகும் இடங்கள்
ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் தங்க போகும் இடங்கள்

ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் தங்க போகும் இடங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 07, 2023
12:35 pm

செய்தி முன்னோட்டம்

ஜி 20 மாநாட்டிற்காக உலகத்தில் உள்ள முக்கியப் பொருளாதாரங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி விவாதிக்க உள்ளனர். இந்த வருடம் ஜி 20 மாநாடு, புது டெல்லியில் நடைபெறுவதை ஒட்டி, அங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நேரத்தில், புது தில்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்கள் எங்கு தங்க போகிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம். ஜோ பைடன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐடிசி மவுரியா என்ற 5 நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் வெள்ளிக்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் அவர், உச்சிமாநாட்டில் சுத்தமான எரிசக்தி மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

card 2

உலகத் தலைவர்கள் தங்க போகும் இடங்கள்

ரிஷி சுனக்: பிரிட்டனின் பிரதமராக, ரிஷி சுனக், அதிகாரப்பூர்வ இந்தியாவிற்கு வரும் முதல் பயணம் இது. முதல் பயணத்தின் போதே ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவர் ஷாங்கிரி லா என்கிற நட்சித்திர ஹோட்டலில் தங்குவார். சீன பிரதமர்: சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்து கொள்ள மாட்டார் என் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் சார்பாக, பிரதமர் லீ கியாங் வருகை தரவுள்ளார். இவரும் இவருடன் வருகை தரும் சீன தூது குழுவும், தாஜ் ஹோட்டலில் தங்க வைக்கப்படுகிறார்கள். ஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லலித் ஹோட்டலில் தங்குவார். அந்தோணி அல்பானீஸ்: ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இம்பீரியல் ஹோட்டலில் தங்குகிறார்.