'அம்ரித்பால் தப்பிக்கும் வரை 80,000 போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்': உயர்நீதிமன்றம்
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், இன்று(மார் 21) பஞ்சாப் காவல்துறையை கடுமையாக சாடியதுடன், காலிஸ்தானி தலைவர் அம்ரித்பால் சிங்குக்கு எதிரான நடவடிக்கையின் நிலை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது. "உங்களிடம் 80,000 போலீசார் உள்ளனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். அம்ரித்பால் சிங் எப்படி தப்பினார்?" என்று பஞ்சாப் அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இது மாநில காவல்துறையின் பெரும் தோல்வி என்றும் நீதிமன்றம் கூறி இருக்கிறது. காலிஸ்தான் தலைவர் மற்றும் அவரது அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் டி' உறுப்பினர்களுக்கு எதிராக பஞ்சாப் காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் உயநீதிமன்றம் இதை தெரிவித்திருக்கிறது.
மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற அம்ரித்பால்
அம்ரித்பால் சிங்குக்கு எதிராக சனிக்கிழமையன்று பெரும் நடவடிக்கையை எடுத்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் 120 பேரை கைது செய்துள்ளதாகவும் பஞ்சாப் போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அம்ரித்பால் சிங்கைப் பிடிக்க சனிக்கிழமையன்று தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததது. ஆனால், தன்னை போலீசார் நெருங்குகின்றனர் என்பதை தெரிந்து கொண்ட அமிரித்பால் ஒவ்வொரு வாகனமாக மாறி தப்பித்துவிட்டார். அம்ரித்பால் சிங், சனிக்கிழமை மாலை ஜலந்தரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றதைக் போலீசார் கண்டுள்ளனர். அம்ரித்பால் சிங் ஒரு தீவிர போதகர் மற்றும் பிரிவினைவாதி ஆவார். கடந்த மாதம், தனது முக்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக இவர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டது.