NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'நபன்னோ அபிஜன்' எதிர்ப்பு அணிவகுப்பு: மூன்றடுக்கு பாதுகாப்புடன் கோட்டையாக மாறிய மேற்குவங்க தலைமை செயலகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நபன்னோ அபிஜன்' எதிர்ப்பு அணிவகுப்பு: மூன்றடுக்கு பாதுகாப்புடன் கோட்டையாக மாறிய மேற்குவங்க தலைமை செயலகம்
    "நபன்னோ அபிஜான்" எதிர்ப்பு அணிவகுப்புக்காக தயாராகி வருகிறது கொல்கத்தா

    'நபன்னோ அபிஜன்' எதிர்ப்பு அணிவகுப்பு: மூன்றடுக்கு பாதுகாப்புடன் கோட்டையாக மாறிய மேற்குவங்க தலைமை செயலகம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 27, 2024
    10:20 am

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா செவ்வாய்க்கிழமை "நபன்னோ அபிஜான்" எதிர்ப்பு அணிவகுப்புக்காக தயாராகி வருகிறது.

    இதனால், கொல்கத்தா முழுவதும் உஷார் நிலையில் உள்ளது. ஆகஸ்ட் 9 அன்று RG கர் மருத்துவக் கல்லூரியில் 31 வயது மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி, மாணவர்கள் அமைப்பாக அடையாளப்படுத்தப்படும் பதிவு செய்யப்படாத குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த ஆர்ப்பாட்டம்.

    சத்ரா சமாஜ் என்று அழைக்கப்படும் குழு, "குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நீதி வழங்குவதில் அரசாங்கத்தின் தோல்விகள்" காரணமாக முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பதவி விலகலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    சந்தேகங்கள்

    காவல்துறையின் அரசியல் சதி கவலை

    மேற்கு வங்கத்தில் பொதுமக்களின் கோபத்தைப் பயன்படுத்திக் கொண்டு குழப்பத்தைத் தூண்டும் சாத்தியமான "சதி திட்டம்" குறித்து கொல்கத்தா காவல்துறை கவலை தெரிவித்துள்ளது.

    "நபன்னோ அபிஜன்" நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டுள்ள நபர் ஒரு அரசியல் கட்சித் தலைவரை ஒரு முக்கிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சந்தித்ததற்கான ஆதாரம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

    தனித்தனியாக, சாத்தியமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராகும் வகையில், கொல்கத்தா காவல்துறை 6,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினரை போராட்ட அணிவகுப்பின் போது அமைதியை நிலைநாட்ட பணியமர்த்தியள்ளது.

    பாதுகாப்பு நடவடிக்கைகள்

    நகரம் முழுவதும் 26 டிசிபிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்

    பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பதற்காக மொத்தம் 19 இடங்கள் கண்டறியப்பட்டு, நகரின் பல்வேறு இடங்களில் சுமார் 26 துணை போலீஸ் கமிஷனர்கள் நிறுத்தப்படுவார்கள்.

    நபன்னாவைச் சுற்றி பாரதிய நீதி சந்ஹிதாவின் பிரிவு 163 இன் கீழ் அரசாங்கம் தடை உத்தரவுகளை விதித்துள்ளது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவதைக் இந்த விதி கட்டுப்படுத்துகிறது.

    நபன்னா என்பது ஹவுரா மாவட்டத்தில் ஹவுரா நகரில் அமைந்துள்ள ஒரு கட்டிடமாகும். இது மேற்கு வங்காள அரசாங்கத்திற்கான தற்காலிக மாநில செயலகமாக செயல்படுகிறது.

    அரசியல் பதட்டங்கள்

    போராட்ட ஊர்வலம் தொடர்பாக பாஜகவை திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது

    இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சி "நபன்னோ அபிஜன்" கட்சிக்கு ஆதரவளிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    இதற்கு பதிலளித்த பாஜக, முதல்வர் மம்தா பானர்ஜி தனது இறுதி தற்காப்பாக காவல்துறை அமலாக்கத்தை நாடுவதாகக் கூறியது.

    செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவில் உள்ள பல்வேறு மையங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளதால் போராட்டங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    கொல்கத்தா
    மம்தா பானர்ஜி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மேற்கு வங்காளம்

    வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு  பங்களாதேஷ்
    காங்கிரஸ் எம்பியுடன் தொடர்புடைய வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி சிக்கியது  காங்கிரஸ்
    "ராகுல் காந்தி வீடியோ எடுக்காமல் இருந்திருந்தால்...": மிமிக்ரி சர்ச்சை குறித்து மம்தா பானர்ஜி கருத்து  மம்தா பானர்ஜி
    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க இருக்கிறார் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி

    கொல்கத்தா

    வடகிழக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம்  இந்தியா
    விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மீண்டும் தனது சேவையை துவங்கியது  ரயில்கள்
    வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 1 இந்தியா
    மேலும் ஒரு பாகிஸ்தான் போட்டிக்கு சிக்கல்; ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் கூடுதல் தாமதம்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    மம்தா பானர்ஜி

    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்  இந்தியா
    ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு இந்தியா
    மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025