மோக்கா புயல் இன்றிரவு தீவிரமான புயலாக மாறும்: தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(மே 11) காலை 5:30 மணியளவில் மோக்கா புயலாக மாறியது. இந்த புயல் இன்று காலை 9:30 மணியளவில் அந்தமானில் உள்ள போர்ட் ப்ளேயருக்கு மேற்கு-தென்மேற்கு திசையில் 510 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டது. மோக்கா புயல் இன்று இரவு வட-வடமேற்கு திசையில் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு பயணித்து தீவிர புயலாக வலுபெறக்கூடும் வாய்ப்பு இருக்கிறது. இந்த புயல் நாளை காலை, வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி நாளை மாலைக்குள் அதிதீவிர புயலாக வலுபெற்று மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும்.
தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
அதன் பிறகு, மே 13ஆம் தேதி அன்று காற்றின் வேகம் அதிகரித்து, மணிக்கு 140-150 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 165 கிமீ வரை உயரும். மே 14ஆம் தேதி அன்று காலை வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை மோக்கா புயல் கடக்கும். மே-10 இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மே-11 முதல் மே-14 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.