வானிலை அறிக்கை: மார்ச் 3- மார்ச் 7
எழுதியவர்
Sindhuja SM
Mar 03, 2023
02:47 pm
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மார்ச் 3ஆம் தேதி வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 4ஆம் தேதியிலிருந்து மார்ச் 5ஆம் தேதி வரை கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மார்ச் 6-7ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பொதுவாக வறண்ட வானிலையாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாக இருக்கும். கடந்த 24 மணிநேரங்களில் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு(சென்னை)
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 3, 2023