வானிலை அறிக்கை: மார்ச் 2- மார்ச் 6
தமிழ்நாட்டில் மார்ச் 2ஆம் தேதி மற்றும் மார்ச் 3 தேதி வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 4ஆம் தேதியிலிருந்து மார்ச் 5ஆம் தேதி வரை கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மார்ச் 6ஆம் தேதி பொதுவாக வறண்ட வானிலையாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாக இருக்கும். மார்ச் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் 40-45கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது.