
தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக,
ஜூன் 13
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜூன்-14 முதல் ஜூன்-16 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜூன் 17
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48-மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.
ஹஜ்ட்பவ்
'பிப்பர்ஜாய்' புயலுக்கான எச்சரிக்கை:
அதிதீவிர புயலாக இருந்த 'பிப்பர்ஜாய்' புயல் தற்போது சற்றே வலுவிழந்து மிகத்தீவிர புயலாக மாறியுள்ளது. ஆனால், வியாழன் அன்று இந்த புயல் கரையைக் கடக்கும் போது, இது பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா இன்று தெரிவித்தார்.
"வியாழக்கிழமை அன்று, கட்ச், தேவபூமி துவாரகா, ஜாம்நகர், போர்பந்தர், ராஜ்கோட், ஜூனாகத் மற்றும் மோர்பி ஆகிய மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 125-135 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும், இடையிடையே மணிக்கு 145-150 கிமீ வேகத்தில் காற்று வீசும்." என்று மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
இந்த புயல் தற்போது குஜராத்தின் துவாரகாவிலிருந்து 280 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.