Page Loader
5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Jun 18, 2024
05:14 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூன் 18 மற்றும் ஜூன் 19 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 20 மற்றும் ஜூன் 21 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 22 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழகம் 

ஜூன் 23 

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 24 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.