Page Loader
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு 

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு 

எழுதியவர் Sindhuja SM
Jun 17, 2024
07:38 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூன் 17 முதல் ஜூன் 21 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 22 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 23 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்தியா 

சென்னையின் வானிலை நிலவரம் 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.