அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 9 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 10 மற்றும் ஜூலை 11 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 12 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 13 முதல் ஜூலை 15 வரை
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.