Page Loader
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கொட்ட போகிறது மழை 

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கொட்ட போகிறது மழை 

எழுதியவர் Sindhuja SM
Jul 23, 2024
06:01 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம்தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜூலை 23 மற்றும் ஜூலை 24 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். மேலும், 30-40 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும். ஜூலை 25 மற்றும் ஜூலை 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம் 

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவியது.