Page Loader
12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Jul 15, 2024
05:40 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம்: மிதமான காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மேற்கத்திய/தென்மேற்கு பகுதிகளில் நிலவுகின்றன. அதன் காரணமாக, ஜூலை 15 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களிலும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 16 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம்

ஜூலை 17 முதல் ஜூலை 21 வரை 

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.