Page Loader
5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Jul 14, 2024
05:45 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம்: மிதமான காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மேற்கத்திய/தென்மேற்கு பகுதிகளில் நிலவுகின்றன. அதன் காரணமாக, ஜூலை 14 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 15 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம்

ஜூலை 16

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 17 முதல் ஜூலை 20 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.