Page Loader
5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Jul 01, 2024
05:44 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 1 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 2 மற்றும் ஜூலை 3 தமிழகத்தில் ஓரி இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 4 மற்றும் ஜூலை 5 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம்

ஜூலை 6 மற்றும் ஜூலை 7

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.