Page Loader
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

எழுதியவர் Sindhuja SM
Jan 28, 2024
05:39 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக பகுதிகளில் நிலவும் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 28 தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும். ஜனவரி 29 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும். ஜனவரி 30 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

 க்கம்ச,

ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை 

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதிகளிலும் மழை பதிவாகவில்லை.